படம் சொல்லும் பாடம் – 016
#MyMoviesList : 002
Vettah ; Malayalam.
💐💐💐
Menu is not the Meal – என்று ஒரு வரி உண்டு. Menu வில் இருக்கும் காட்சிகளை வைத்து order செய்தால், அதுவே கிடைக்கும் என்று நினைத்தால் தவறு நம்முடையது. அதுதான் இந்தப்படம் !
மஞ்சு வாரியர் ஒரு தனி League இல் இருப்பார் போல ! நடை, உடை, Fitness எல்லாம் அமர்க்களம். துருப்புசீட்டை கையில் வைத்துக்கொண்டு ஆனால் காரணம் கண்டுபிடிக்க முடியா நிலையை .. கூடவே இருக்கும் இன்னொரு முக அதிகாரியை கேள்வியும் கேட்க முடியா சூழ்நிலையை … படம் முழுக்க வெளிப்படுத்தும் நடிப்பு. ( ரஜினி யுடன் equal ஆக எதிராக ஒரு படம் பண்ணுங்க Madam. அடுத்த ரம்யா கிருஷ்ணன் நீங்க தான் ! )
குஞ்சாக்கோ போபன் – என்ன ஒரு ரகுவர சிரிப்பு வில்லத்தனம் ! மனிதர் அட்டகாசமாக காய் நகர்த்திவிட்டு .. அய்யோ பாவம் .. என்று யோசிக்க வைக்கிறார். ஆனாலும் ” நான் தான் கொன்னேன் ” என்று சொல்லிவிட்டு கண் பார்த்து சிரிக்கும் அந்த சிரிப்பு போதும் .. நாம் அவரை வில்லனாக நினைக்க ! Again .. Menu is not the Meal.
மொத்தமே 8 பேர் தான். சில வெளிப்புற காட்சிகள் தான். ஆனால் நிமிடங்கள் பறக்கின்றன. அதுதான் மலையாள இயக்குனர்களின் ரகசிய ஆளுமை. ரஜினிக்கு பெரிய கதை தேவை 3 மணி நேரத்திற்கு. ஆனால் இங்கே பள்ளிக்கு பிள்ளையை அனுப்பும் ஒரு சராசரி Couple போதும் – திரைக்கதையை அமைக்க, நகர்த்த, கவனிக்க வைக்க !
வாழ்த்துக்கள் Team.
💐💐💐