படம் சொல்லும் பாடம் – 018
#MyMoviesList : 004
Joseph ; Malayalam
💐💐💐
சராசரி மனிதர்களிடம் இருந்து Hero க்களை வித்தியாசப்படுத்தி காட்ட உலகமே முயற்சிக்க, சராசரி மனிதரை அப்படியே காண்பிக்க மலையாளம் முயற்சித்து கொண்டே இருக்கிறது. அப்படி ஒரு சராசரி ஆனால் புத்திசாலி மனிதர் தான் Joseph.
நல்ல உயரம், Unfit உடல், கையில் பீடி, யாரோ என்னவாகவோ இருந்துவிட்டு போ .. என்னும் உடல் மொழியில் நடை, தீர்க்கமான பார்வை, சில வார்த்தைகள் பேசி புத்திசாலித்தனத்தை விளங்க வைக்கும் அறிவு, தாடி சொல்லும் சோகம் … அவ்வளவும் கலந்து ஒரு Look கொடுக்கும்போது Hollywood Bollywood Kollywood அனைத்து Hero க்களும், அவர்களின் பிம்பங்களும் .. பிச்சை எடுக்க வேண்டும் ! ஒரு கொலையை செய்யும் கொலையாளியை அவர் கண்டுபிடித்து விட்டு, பீடியுடன் நடந்து சென்று Scooter start செய்யும் அழகே என்னை பொறுத்தவரை கம்பீரம் !
தாடி வைத்து, பீடி குடித்து, Alcohol பழகி, unfit ஆகி, பேசாது வான் பார்க்கும் அனைவருக்கும் ஒரு கசப்பான கடந்த காலம் இருக்கும். அப்படித்தான் Joseph க்கும். அதை அவர் சொல்லும் விதம் அப்படியே அழகான கதையாய். அதே நேரம் நடக்கும் ஒரு விபத்தை அவரின் Police மூளை ஆராய .. அங்கே வேகம் எடுக்கும் படம் …கடைசி Frame வரை அதே வேகத்தில்.!
Joseph உடன் பயணிக்கும் நான்கு நட்புக்கள், முன்னாள் மனைவியின் தற்போதைய கணவர், ஒரு தேநீர் கடைக்காரர், ஒரு வில்லத்தன ஜோடி, ஒரு கடந்த கால நினைவு .. அவ்வளவு தான் கதை. Characters இல் எளிமை தான் கதையின் வலிமை போல ! சில காட்சிகள் அவ்வளவு அழகு. குறிப்பாக .. பிறந்த குழந்தையை கையில் ஏந்தும் Joseph ன் முக பாவனை. அதே போல .. படம் முடியும் தருவாயில் தான் வசித்த வீட்டை ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியே செல்லும் காட்சி. எவ்வளவோ சொல்லி விடுகிறது !
படத்தின் முடிவில் … Joseph ன் Police அறிவு நம்மை யோசிக்க வைத்தாலும், வேறு மாதிரி செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அந்த Character அப்படியே வாழ்ந்திருக்க வேண்டும் என்பதில் தான் இயக்குனர் தன்னை பதிக்கிறார். சமீப காலங்களில் நான் பார்த்த படங்களில் Joseph பார்க்கும் அந்த நேர்விழி இறுக்கமான ஆழ் மனம் துளைக்கும் பார்வையை எந்த Hero வும் பார்த்தது இல்லை. அந்த பார்வை சொல்லும் மௌனக் கதைகள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. அதை நினைவு படுத்துவதால் தான் Joseph நமக்கு பிடித்து போகிறார். படமும்.
💐💐💐