படம் சொல்லும் பாடம் – 017
#MyMoviesList : 003
Helen ; Malayalam
💐💐💐
Habit of Life – இந்த வரிக்கு அர்த்தம் யதார்த்தமாக இந்த படத்தின் கடைசி காட்சியில் பொருத்துவது தான் அழகு. கடைசியாக எப்போது நீங்கள் சாதாரண மனிதர்களை பார்த்து முழு நிறைவாக சிரித்தீர்கள் என்று நான் கேட்டால் …உங்களின் பதில் என்னவாக இருந்தாலும், இந்த படம் பார்த்தவுடன் … உங்களுக்கு நான் சொல்வது புரியக்கூடும். அங்கே வருகிறது ” Habit Of Life “.
பெண், அப்பா, ஒரு Mall, அதில் ஒரு உணவு வணிக நிறுவனம், அதில் வேலை பார்க்கும் சக ஊழியர்கள், எப்போதும் எரிந்து விழும் மேலதிகாரி, பெண்ணின் இஸ்லாமிய காதலன், பயனற்ற காவல்துறை அதிகாரி …அவரின் மனித நேயம் கொண்ட உதவியாளர், சூழ்நிலை புரிந்து உதவும் கைதி … இவ்வளவு தான் Characters ! ஆனால் நேரம் போவதே தெரியவில்லை. இவற்றின் இடையே .. திக் திக் கடைசி நிமிடங்கள் மலையாள இயக்குனர்களுக்கு மட்டுமே வரும் கலை போல !
யார் அந்த பெண் ? சிரித்தால் முகம் மலர சிரிக்க வேண்டும், இல்லை என்றால் சிரிக்க கூடாது .. என்று சிரித்து Prove செய்யும் நடிகை. உயிர் தப்பிக்க வேண்டும் என்று வரும்போது அவர் எடுக்கும் முயற்சிகள் …. மனித Survival க்கான பாடங்கள். நாம் எப்படி வேண்டுமானாலும் சௌகர்யங்களுக்கு இடையில் வாழலாம். ஆனால் கடின வேளைகளில் எப்படி வாழ்கிறோம் ? என்பது தான் இங்கே கேள்வி. அங்கேதான் நாம் முன்னேறுகிறோமா, அல்லது முடங்குகிறோமா என்பது தெரிய வரும்.
தமிழ் படங்களில் வில்லனாக பார்க்கப்பட்டவர் தான் இங்கே அன்பான அப்பா. ” night மட்டும் ஒரே ஒரு Cigarette அடிச்சிக்கவா ? ” என்று கேட்கும் அவரின் நடிப்பை தமிழ் சினிமா வீண் செய்திருக்கிறது என்றே தோன்றுகிறது. பதைபதைக்கும் நேரங்களில் … ஒரு அப்பாவின் உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கும் அவரை இன்னும் பயன்படுத்த வேண்டும்.
படங்களை பார்க்கும்போது .. யார் இந்த இயக்குனர் ? இவரின் அடுத்த படம் என்ன பார்க்கலாம் .. ? என்றெல்லாம் தோன்றினால் அது நல்ல படம் என்றே சொல்லி விடலாம். படத்தின் கடைசி வரியாக Helen என்று முடியும்போது .. நமக்கு பக்கத்து வீட்டு பெண்ணை காப்பாற்றிய உணர்வு ! அப்படி இருந்தால் தான் அது படம் அல்லது அப்படி இருந்தால் அது மலையாள படம் !
💐💐💐





