படம் சொல்லும் பாடம் – 019
#MyMoviesList : 005
Ishq ; Malayalam.
💐💐💐
உங்களுக்கு 18 முதல் 25 வயதா ? ஒரு பெண்ணை விரும்புகிறீர்களா ? அந்த பெண்ணுடன் யாருக்கும் தெரியாமல் ஒரு Drive போக முடிவு செய்கிறீர்களா ? அப்படி செல்லும்போது Romantic ஆக ஏதோ செய்யப்போக அங்கே வரும் Moral Police ஐ நீங்கள் எதிர்கொள்ள வேண்டி வருகிறதா ? இது அத்தனையும் இரவில் நடக்கிறதா ? நிச்சயம் நீங்களும் நீங்கள் திருமணம் செய்ய நினைக்கும் / காதலிக்கும் பெண்ணும் பார்க்க வேண்டிய படம். அப்படிப் பார்த்தீர்கள் என்றால் அந்த மாதிரி ஒரு Drive போகவே யோசிப்பீர்கள் ! அதுதான் படத்தின் வெற்றி.
இந்த படத்தை மூன்றாக பிரித்துவிடலாம். ஒன்று மேலே நான் சொன்ன விடயம். இரண்டாவது ஒரு பழிவாங்கல் சினிமா. மூன்றாவது அந்த இருவருக்குள்ளும் இருக்கும் உறவு இந்த சம்பவங்களால் என்ன ஆகிறது என்பது !
இரண்டாவதிற்கு வருவோம். ஒரு படத்தில் பயந்த மாதிரி நடித்த Hero அப்படியே எதிர்நிலையில் நடிப்பதும், வெறுப்பை ஏற்றிய வில்லன் பயந்து நடிப்பதும் .. மற்ற படங்களில் இருந்தாலும் இங்கே அது வேறு ஒரு உயரம். கையறு நிலை என்று ஒரு வரி உண்டு தமிழில். அதை இருவரும் வேறு வேறு கோணங்களில் வெளிப்படுத்தி இருப்பதுதான் படத்தின் முதுகெலும்பு. முதல் பாதியில் ” ஐயோ அங்கேர்ந்து கிளம்புங்களேன் ” என்று நமக்குள் ஒலிக்கும் குரல், இரண்டாவது பாதியில் .. ” பாவம் விட்டுடு ” என்று சொல்ல வைப்பதுதான் இயக்குனரின் சாமர்த்தியம்.
மூன்றாவது பகுதி வழக்கமான ஒன்று என்றாலும், இந்த பகுதிக்குள் வருவதற்குள் நமக்கே Hero மேல் ஒரு மெல்லிய எதிர்மறை / குழப்பமான கேள்வி வந்துவிடும்.
Hero – கதையை விடுங்கள். யார் இந்த பையன் ? என்று கேட்க வைக்கும் நடிப்பு ! அதே தான் வில்லனுக்கும். ஒருவித Psycho role ஐ இருவருமே நடித்தாக வேண்டிய களம். பொதுவாக படங்களில் ஒருவரை தான் நாம் இப்படி பார்ப்போம். இங்கே இருவரும் முற்பாதி பிற்பாதி என்பது நடிப்புக்கான பட்டறை.
கதாநாயகி கண்ணால் பேசி, வியர்த்து, பயந்து, ஒடுங்கி .. ஒரு Car ன் பின்பக்க இருக்கையில் இருந்து கொண்டு இவ்வளவு Expressions காட்ட முடியுமா ? அசத்தல்.
வில்லன் வேறு level. எழுந்து சென்று ஒரு அறை கொடுக்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றினால் … இயக்குனருக்கு ஒரு சபாஷ் சொல்லுங்கள்.
ஒரு Swift Car, ஒரு இரவு, காதலிக்கும் இருவர், வில்லன், எடுபிடி, அந்த பக்கமாக செல்லும் சிலர், சில ஆட்டோக்காரர்கள், வில்லனின் மனைவி, குழந்தை .. அவ்வளவு தான் Characters. ஆனால் 2 plus மணி நேரம் போவது தெரியாத ( சொல்லப்போனால் ஒருவித இயலாமையுடன் கவனிக்கும் ) கதை.
இந்த படம் பார்த்த பின் வீட்டுக்கு தெரியாமல், Hostel இல் பொய் சொல்லிவிட்டு, வாகனங்களில் பயணிக்கும் காதலிக்கும் ஆணும் பெண்ணும் கொஞ்சம் யோசிக்க கூடும். யார் எப்போது எங்கே எப்படி பிரச்சினையாக மாறுவார்கள் என்று தெரியாத இரவுகளை நோக்கிய அப்படிப்பட்ட பயணங்கள் தேவையா என்றும் தோன்றலாம்.
பொதுவாக Moral Police க்கு பெரிய பலம் ” வீட்டுக்கு சொல்லுவேன் ” என்னும் ஒற்றை வரி ! அதற்கு பயப்படும் ஜோடியாக இருந்தால் இந்த படத்தை பார்த்துவிட்டு Car ஐ Start செய்யவும்.
மொத்த Team க்கும் எம் வாழ்த்துக்கள்.
💐💐💐