படம் சொல்லும் பாடம் – 021
#MyMoviesList : 007
Hey Jude ; Malayalam
💐💐💐
பெரிய பையன் ஆனால் எண்ணங்களில் சிறுவன் மனநிலை, அதே சமயம் எண்களில் பெரிய புத்திசாலி. குடும்பம் அவனை பரிகாசித்து கொண்டே இருக்க, தனக்கென ஒரு உலகத்தில் அவன் வாழ ஆரம்பிக்கிறான். யாருமற்ற அந்த உலகத்தில் நேர்குத்திய கீழ் நோக்கிய பார்வையும், மௌனமும், தான் மட்டுமே பேசும் Video வும் அவன் வாழ்க்கை. அங்கே யாதும் இல்லை – அவனையும் அவன் தனிமையையும் தவிர !
பாட்டு, பாடல், Orchestra, நான்கு இளைஞர்கள், குடித்துக்கொண்டே இருக்கும் ஆனால் செம்ம ஜாலியான அப்பா என்று வாழ்க்கையை தனக்கு பின் இருக்கும் சோகம் வெளியே வராமல் வாழும் பெண் அவள். இவளுக்கு அப்போதைய பொழுதை இரு Extreme மனநிலைகளில் வாழ்ந்து பார்த்தாக வேண்டும். வழக்கமான பெண் வாழ்க்கை அவளுடயது அல்ல.
இருவரும் சந்திக்கும் இடம் கோவா. அங்கே நிகழும் சந்திப்புகள், பார்வை பரிமாற்றங்கள், புரிதல்கள், மன மாறுதல்கள் …இவைதான் படம். Good Feel movie என்னும் பட்டு இழை உடல் மேல் தழுவி செல்வது போன்ற காட்சி அமைப்புகள். ஒரு இரண்டு மணி நேரத்தை கேரள கோவா எல்லைப்பகுதியில் செலவழித்து வரலாம். மனம் ஏனோ நிச்சயம் நிம்மதியாக சிரிக்கும் !
நிவின் பாலி யா இது ? சிறுவன் மனநிலை, புத்திசாலித்தனம், வெட்கம், தலை குனிந்து அல்லது வேறு எங்கோ பார்க்கும் பார்வை … அசத்தல் நிவின். திறமைகள் எப்போதுமே Special Characters களில் தான் வெளியே வருகிறது. அந்த Jude கண்ணுக்கு முன் அப்படியே நிற்கிறார்.
திரிஷா வா ? ஒரு Carefree Girl from Goa – உடை, பேச்சு, Behavior ல் அழகாக வெளிப்படுத்தி விடுகிறார். நிவினும் திரிஷாவும் சந்திக்கும் அந்த கடற்கரை காட்சியில் … நம்ம ஊரு திரிஷா பார்க்கலாம். அங்கே தான் நிவின் வெட்கப்பட்டு ஓடும் நிகழ்வும். இருவரும் அசத்தும் காட்சி அது !
நிவினின் அப்பா அம்மா, திரிஷா வின் அப்பா, நிவினின் தங்கை, திரிஷாவின் நான்கு நண்பர்கள் … அவ்வளவு தான் Characters. ஆனால் ஒரு மெல்லிய நிகழ்வு உள்ளே நமக்குள் இழையோட இவர்களே காரணம். ஒரு Typical மலையாளியை கண் முன்னே நிறுத்தும் நிவினின் அப்பாவுக்கு special clap. நாம் அவ்வப்போது அங்கே இங்கே பார்க்கும் மலையாளியை அவரில் பார்க்க முடியும்.
வாழ்த்துக்கள் Team. ஒரு மெல்லிய படத்தை காட்சிகளாய் அடுக்கி கொடுத்தமைக்கு !
💐💐💐