நான் எனப்படும் நான் : 067
#WhoisJay : 042
💐💐💐
” சார் நீங்கள் கடவுள் மறுப்பாளரா ? ” என்று கேட்பவர்களிடம் பெரும்பாலும் சிரித்து கடந்துவிடுவது என் வழக்கம். ஒன்று இருந்தால் தானே மறுக்க !
கடவுள் இருப்பதை மறுத்தால் அவன் ஏதோ கடவுளுக்கு எதிரானவன் போல சித்தரிக்கும் மனிதர்களை கவனிக்கிறேன். எனக்கு எதிர்க்கருத்தில் நீங்கள் இருந்தாலும் உங்களை சிரித்து கடக்கும் என்னையும் கவனிக்கிறேன். ஒன்றை ஒப்புக்கொள்ள நீங்கள் மறுத்து, அதனால் நீங்கள் வில்லனாக சித்தரிக்கப்படுவீர்கள் எனில் அந்த கடவுளை பார்த்தும் நான் சிரிக்கவே வேண்டி இருக்கும். பின்னே ? கடவுள் என்ன Hero வா ? அப்படியே ஒப்புக்கொள்ள ? துதி பாட ? Fans ஐ உருவாக்க ?
கடவுள் என்பது என்னை பொறுத்தவரை உங்களின் நம்பிக்கை. அதை நான் மனித பார்வையில் மதிக்கிறேன். அவ்வளவு தான் என்னை பொறுத்தவரை கடவுள். உங்கள் நம்பிக்கைக்கு நீங்கள் பிடிக்கும் குடை தான் கோவில்கள். உங்கள் நம்பிக்கைக்கு நீங்கள் அளிக்கும் உருவம் தான் கடவுள். அதே நம்பிக்கைக்கு நீங்கள் அளிக்கும் தத்துவம் தான் மதம். அந்த நம்பிக்கைக்கு நீங்கள் கொடுக்கும் Classifications தான் மதத்திற்குள் சாதி ! மற்றபடி எல்லாமே உங்களின் நம்பிக்கை தான் ! உங்களின் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். ஒன்றை மதிப்பதால் அதை ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
Corona செய்திருக்கும் மிகப்பெரிய ஆழ்மன சுத்திகரிப்பு … ” எங்கே கடவுள் ? ” என்ற கேள்வி தான். ” இங்கே வராதீர்கள் ” என்று சொல்லும் எந்த ஆலயமும் என்னை பொறுத்தவரை எப்போதுமே செல்ல முடியாத, கூடாத இடங்களே ! பின்னே ? இவ்வளவு நாள் மக்களால் வாழ்ந்த ஒரு இடம், இன்று மக்களுக்கு ஒரு துயர் என்றவுடன் வராதே என்று சொன்னால் ….அந்த இடம் போல ஒரு Egoistic place இருக்க முடியுமா ? ஏன் .. அங்கே சில மருத்துவர்களை வைத்து, Check செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி … ம்ஹூம் .. நீ நன்றாக இருக்கும்போது வா .. எனக்கு பணம் கொடு, என்னை வணங்கு …இது என்ன மாதிரியான Concept ! ? யாருமற்ற ஆலயங்களை பார்க்கும்போது ஒன்று நிச்சயமாக தோன்றுகிறது. உயிர் தான் பெரும் கடவுள். அதற்கு பிறகு தான் உருவாக்கப்பட்ட கடவுளும் !
நான் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பேற்கும் வரை எனக்கு கடவுள் தேவை இல்லை. நான் கொண்டு வரும் வெற்றிகளுக்கு நானே காரணம் என்ற இருமாப்பும், நான் ஏற்படுத்தும் தோல்விகளுக்கு யாரோ காரணம் என்ற மனநிலையும் தான் .. கடவுளை உள்ளே கொண்டு வருகிறது. என்னை பொறுத்தவரை, இயற்கை என்னும் பெரும் புண்ணியத்தில் நான் ஒரு மிடறு துகள் அவ்வளவே !
கடின காலத்தில் உதவி செய்யும் ஒருவனை ஒருத்தியை விட கண்ணில் தெரியும் கடவுள் இந்த உலகில் இல்லை ! அந்த ஒருவனை ஒருத்தியை கடவுள் தான் அனுப்பி வைத்தார் என்று சொல்லும் ஜீவிகளுக்கு … எங்கே அந்தக் கடவுளை Corona வின் தாக்குதல் உள்ள இடங்களுக்கு அப்படி உதவும் மனிதர்களை அனுப்ப சொல்லுங்கள் பார்ப்போம் ! அப்படி அனுப்பினால் … அவர் மருத்துவராக, செவிலியராக, வாகன சாரதிகளாக இருந்தால் .. அவர்களே எம் கடவுள். எங்கோ ஓர் உருவத்தின் பின் ஒளிந்து நிற்கும் கடவுள்கள் என் கடவுள் அல்ல !
💐💐💐