படம் சொல்லும் பாடம் – 022
#MyMoviesList ; 008
Movie ; Android Kunjappan Ver 5.25 / Malayalam / Prime Video
💐💐💐
அப்பாவும் மகனும். மகனுக்கு வேலை கிடைத்து வெளியே செல்ல வேண்டும் எனில் அப்பா தனியாக வாழவேண்டும். அப்பாவிற்கு அதில் விருப்பம் இல்லை என்பதால் வேலை செல்ல முடியாமல் தவிக்கும் மகன். இடையில் வேலைக்கு என்று யார் யாரையோ வைத்தாலும், நிறைவு பெறாத அப்பா … கடைசியில் ஒப்புக்கொள்ள வேலைக்கு ருஷ்ய தேசம் செல்லும் மகன் அனுப்பும் உதவியாளர் – ஒரு Humanoid. அங்கே தான் கதை ஆரம்பம் !
தனிமைக்கு மருந்து மகன் மட்டுமே என பிடிவாதம் பிடிக்கும் Character – அவரை எப்படியாவது – சரி செய்து வேலைக்கு செல்ல நினைக்கும் மகன் …இந்த இருவருக்குமான உறவில் இழையோடும் உரிமை …வாஹ் ! கேரள இயக்குனர்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு அழகாக யோசிக்க முடிகிறதோ ?
Humanoid நிர்வாணமாக நிற்கிறது என மக்கள் சொல்ல அதற்கு வழக்கமான சேட்டன் களின் உடையை அணிவிக்க … காவி வேட்டியுடன் அது நடக்கும் அழகே அழகு. உணர்வுகள் அற்ற ஆனால் Programmed Machine என்று அந்த Character அசத்தலோ அசத்தல். நிறைய இடங்களில் வசனங்கள் நம்மை மெல்லியதாக சிரிக்க வைக்கின்றன.
தான் நினைத்ததை சொல்ல முடியாமல் போன ஒரு பழைய நட்பின் அறிமுகமும் படத்தில் ! அவருடன் செய்தி பரிமாற்றம் ….! அந்த பழைய பக்கங்களை இதை விட அழகாக சொல்ல முடியுமா ? மகன், மகனின் ஜப்பானிய காதலி, நட்பு வட்டத்தில் ஒரு 5 பேர் .. இவ்வளவு தான் Characters. ஆனாலும் படம் நம்மை வருடிக்கொண்டே இருக்கிறது.
மகனா Humanoid ஆ என்றால் .. எதை தேர்வு செய்வது என்கிற குழப்பத்தை புரிய வைக்கும் ஒரு முடிவுடன் படம் முடிய … அந்த Humanoid நம்முடன் நடந்து வருவது போலவே இருக்கிறது நமக்கு – படம் முடிந்த பின்னும். அங்கே இருக்கிறது இந்த படத்தின் வெற்றி !
மொத்த Team க்கும் வாழ்த்துக்கள்.
💐💐💐





