படம் சொல்லும் பாடம் – 023
#MyMoviesList : 009
Seconds / Malayalam /Prime Time.
💐💐💐
மூன்று மனிதர்கள். ஒரு Lift. மூவரும் உள்ளே சென்றவுடன் Lift மூடுவதற்குள் ஒரு பெண் உள்ளே நுழைகிறார். Lift இயங்க ஆரம்பிக்கிறது. பெண் மூவரையும் கவனிக்கிறாள். ஒருவன் மேல் நம்பிக்கையே இல்லை. இன்னொருவன் மேலும் நம்பிக்கை வரவில்லை. மூன்றாமவன் சிரிப்பதை வரவேற்பதா வெறுப்பதா தெரியவில்லை. சிரித்து வைக்கிறாள். Lift நிற்கிறது. சட்டென இருள். மூன்று கொலைகள் நடக்கிறது. மற்றவர்கள் ஓடிவந்து Lift ஐ மேலே கொண்டு வருகிறார்கள். பெண் வெளியே வருகிறாள். இவ்வளவு தான் கதை. ஆனால் .. உள்ளே நடந்ததன் பின்னணி .. ? அதுதான் கதை !
Seconds இல் நடக்கும் விடயத்தை ஒரு படமாக எடுக்க முடியுமா ? முடியும் என்று நிரூபிக்கிறார்கள் மலையாள இயக்குனர்கள். அட்டகாசம். படம் ஆரம்பித்தது முதல் … முடியும் வரை ஓட்டம் தான். சில நகர்வுகள் வழக்கமான சினிமா என்று வைத்துக்கொண்டாலும் … படம் நம்மை இழுத்துக்கொண்டே இருப்பது தான் உண்மை !
நமக்கு தேவையான ஒன்றை பெற இன்னொருவரை பயன்படுத்த முயலும் போது தான் ( அவருக்கு அறியாமலே ! ) எந்த ஒரு Crime க்கும் Platform ஆரம்பமாகும். அப்படி நான்கு பேருக்கும் .. நான்கு வித தேவைகள். அதை பெற அவர்கள் செய்யும் நகர்வுகள். அங்கே வருகிறது Crime.
மொத்தமே ஒரு 10 Characters தான். ஆனால் .. படம் வேகம் வேகம் என்றே நகர்கிறது. இதற்கான IMDP Rating குறைவாக இருப்பது கொஞ்சம் ஆச்சர்யம் என்றாலும் … இன்னும் ஏதோ ஒன்று படத்தில் குறைவது போல உணர்வதும் உண்மை.
கடைசி காட்சியில் தன் இன்னொரு முகத்தை காட்டும் Middle Class மாதவன் Character தான் செம்ம ஆச்சர்யம். வாழ்த்துக்கள் Team. நேரம் போனதே தெரியவில்லை.
வாழ்க்கை சட்டென்று மாறும். அங்கே தான் வாழ்க்கையின் Twist ம் Turn ம். Corona வின் வரவை போல .. ஒரு Lift பயணம் ( சில நொடிகள் ) எல்லாவற்றையும் புரட்டி போடுகிறது !
💐💐💐