படம் சொல்லும் பாடம் – 024
#MyMoviesList ; 010
#Badla / Hindi / Netflix
💐💐💐
தவறான நோக்கங்களுடன் உறவு என்பது ஏதோ ஒரு விதத்தில் தவறான எதிர்கால நிகழ்வுகளையே உருவாக்கும். சாட்சிகள் அற்ற உறவில், மன சாட்சி படுத்தும் பாடு பெரும்பாடு !
கணவன், குழந்தை, Business Person of the Year Award வாங்கும் அளவு அறிவு நிறைந்த மூளை, account நிறைந்த வருமானம், புகழ் …அனைத்தையும் தாண்டி ஒரு உறவு. அந்த உறவிற்கான நேரம், அங்கே நடக்கும் நிகழ்வுகள், வாக்குவாதம், ஒரு விபத்து, கொலை, பொய், Police, Advocate … என்று பெரிய தொடர்ச்சியாக நிகழ்வுகள். அதில் இருந்து வெளிவருவது போல தோன்றினாலும் .. இறுதியில் தவறுக்கு தண்டனை உண்டு என்பதான முடிவு !
அமிதாப் ஏன் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்பதை நிரூபிக்கும் காட்சிகள். ஒரு சிறு அறைக்குள் படம் முழுக்க இருந்து வாதித்துவிட்டு, வெளியே நடந்து செல்லும்போது .. தெரிகிறது அவரின் Heroism. என்ன ஒரு நடிப்பு ! இலேசாக கிண்டலாக சிரிக்கும் அமிதாப்பை பார்த்துக்கொண்டே இருக்கலாம். ( ரஜினி இந்த இடத்திற்கு வர மிக மிக தாமதம் ஆகும். அல்லது வராமலேயே போகலாம் ! )
டாப்ஸி நிச்சயமாக மற்ற நடிகைகளை போன்ற ஒரு நடிகை அல்ல. அப்பாவியாய் முகம் வைத்துக்கொண்டு அவரால் .. வில்லத்தன கதை சொல்ல முடியும் ! Business Woman of the Year கனத்திற்கு அப்படியே பொருந்திவிட்டு, உயிர் கொலை செய்யும் நேரத்தில் .. முகத்தின் உணர்வுகளில் அப்படி ஒரு வித்தியாசம் காட்டுகிறார்.
மொத்தமே 10 12 Characters தான். வெளிநாட்டு களம். Details Details என்று பேசும் அமிதாப். இப்படி அப்படி என்று போக்கு காட்டும் டாப்ஸி. மகனை இழந்து விட்டு கண்ணில் பரிதவிக்கும் அம்மா. ஆனால் படம் நகர்வதே தெரியாத அளவிற்கு வேகம்.
ஒரே ஒரு திருப்பம் தான். வாழ்க்கை எல்லாவற்றையும் புரட்டி போடுகிறது. அப்போது நல்ல வாழ்க்கை வாழந்தவர்கள் உடல் மன வலியை மட்டும் பெறுவார்கள். வேறு வாழ்க்கை வாழ்ந்தவர்கள் அதையும் தாண்டி குறிப்பாக ஒன்று பெறுவார்கள் … அது மனசாட்சி யின் வலி !
வாழ்த்துக்கள் Team !
💐💐💐