நான் எனப்படும் நான் : 071
#WhoIsJay ; 046
எனக்கு வந்த சில கேள்விகள் / அவற்றின் பதில்களை இங்கே தொகுக்கிறேன். யாருக்கோ உதவக்கூடும்.
21 நாட்கள் அறிவிப்பில் உங்களின் முதல் Reaction என்ன ?
💐 உலக உயிர்களின் இழப்பு தவிர்க்க இயலாதது. ( இல்லையென்றால் இப்படி 21 நாள் வர வாய்ப்பில்லையே ! ). அது குறைவாக இருக்க வேண்டும்.
💐 தனிப்பட்ட முறையில் என்ன தோன்றியது ?
பல வருடங்களாக “ஒரு மூன்று நாட்கள் கிடைத்தால் அப்படி தூங்குவேன் ” என்று சொல்லிக்கொண்டு இருந்தேன். அதைதான் முதல் மூன்று நாட்கள் செய்தேன்.
💐 அதற்கு பின் ?
என் வாழ்வின் மிக Productive ஆன நாட்களாக இந்த நாட்களை நான் கருதுகிறேன். இந்த நாட்களில் நான் என்ன செய்திருக்கிறேன் என்பதை இங்கே பட்டியலாக சொல்கிறேன்.
1. தினசரி / 5 Online வகுப்புகள். மனிதர்களின் திறமைகள் வெளியே வர ! அதில் குழந்தைகளின் online வகுப்பு எனக்கு மிக நெருக்கமானது. ( ஒரு குழந்தை சொன்ன – வகுப்பறைகளுக்கு வாரம் ஒரு முறை பெரும் சாதனையாளர்கள் வர வேண்டும். அவர்களை நான் நேரில் கேள்வி கேட்க வேண்டும் – என்ற எண்ணம் என்னை மிகவும் வசப்படுத்திய ஒன்று ! )
2. #5pmLive – ஒரு பயிற்சியாளராக, ஒரு நட்பாக, ஒரு சக தோழமையாக, என்னால் இயன்ற மன உதவிகளை Live இல் செய்கிறேன். ஒரு மணி நேரம் அளவிற்கு நட்புக்களுடன் பயணிப்பது மறக்க முடியாத விஷயம்.
3. US Dubai Doha Canada போன்ற இடங்களில் இருந்து online ல் படிப்பவர்கள் மூலம் அங்கே கள யதார்த்தத்தை புரிய முயற்சிக்கிறேன். இந்தியா சிறப்பாக செயல்படுகிறது என வெளியே காட்டிக்கொண்டாலும், Test செய்யாமல் இருப்பதுஅறிவு சார் ஏற்புடையது அல்ல.
4. 10000 Steps ஐ வீட்டின் மொட்டை மாடியில் நடந்து முடிக்கிறேன். மிக மிக நிறைவான ஒரு உடற்பயிற்சி தருணம் இது !
5. 9 புத்தகங்களை படித்திருக்கிறேன். நிறைய கருப்பொருட்கள் அகத்தில் நிற்கின்றன.
06. தினம் ஒரு படம் பார்க்கிறேன். சமீபத்தில் மிக நெருக்கமான படங்கள் – Four Minutes, A Twelve Year Night & Capernaum . மூன்றும் திறமை, மன உறுதி சார் படங்கள். எம் settings ஐ கொஞ்சம் யோசிக்க வைத்த படங்கள் !
07. குழந்தைகள் உடன் செலவிடும் நேரம் எம் நிறைவான வாழ்க்கையின் அர்த்தமாக மாறி இருக்கிறது.
08. என்னால் இயன்ற அளவிற்கு உதவிகளை பொது சேவை செய்யும் நட்பு வட்டங்களுக்கு கொடுத்திருக்கிறேன்.
💐 இன்னும் என்ன செய்ய நினைக்கிறீர்கள் ?
இந்தியா முழுவதுமாக சுற்றியதில் எடுத்த புகைப்படங்களில் சில புகைப்படங்களை வெளியிட நினைக்கிறேன். அதன் சார் எழுத்துக்களுடன் !
💐 வேறு எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா ?
தேவை அற்றவைகளை block செய்தால் தேவையானது முன்னேறும் ! 😊😊
💐💐💐