படம் சொல்லும் பாடம் – 027
#MyMoviesList ; 013
#FourMinutes / English / Netflix
💐💐💐
இரண்டு பெண்கள். ஒருவர் Piano சொல்லிக்கொண்டுக்கும் ஆசிரியர். இன்னொருவர் Piano வை அட்டகாசமாக வாசிக்கும் மாணவர். இருவரும் சந்திப்பது சிறைச்சாலையில் ! ஆம். ஆசிரியர் Piano சொல்லிக்கொடுக்க அங்கே வரும்போது தான் வாசிக்கும் Piano வின் இசைக்கேற்ப விரல்களை எதிரே இருக்கும் Bench இல் வாசிக்கும் கைதியை கவனிக்கிறார். அந்த திறமையை வெளிக்கொண்டுவர ஆசிரியர் என்ன செய்கிறார் என்பது தான் கதை !
சமீப காலங்களில் நான் பார்த்த படங்களில் இந்த படம் மிக வித்தியாசமானது ! ஆசிரிய பெண் – அவருக்கொரு சவாலான கடந்த காலம் – அதில் இருந்து தனித்து வாழும் அவர் Very Systematic ! அதே நேரம் திறமையை கண்டுவிட்டால் … அதை வெளியே கொண்டுவர எதையும் செய்யும் முன்னெடுப்பு ! ஆசிரியர் /பயிற்சியாளர் / Coach / பெற்றோர் பார்க்க வேண்டிய படம் இது. திறமையை கண்டுபிடிக்கும் ஆசிரியர் அதைக்கொண்டு Student ன் இன்னொரு பக்கத்தை வெளிக்கொண்டு வர எடுக்கும் முயற்சிகள், அதற்கான தெளிவான பேச்சு ( அவள் யாரென்பது எனக்கு தேவையில்லை..அவளின் திறமை தான் என் தேவை ! ) , காவல்துறையை எதிர்க்கும் பார்வை … யார் இந்த நடிகை என்று யோசிக்க வைக்கிறது !
மாணவி மிக Violent ஆன ஒரு ஆளுமை. Piano வில் விரல் முறிந்து இரத்தம் வழியும் போதும் வாசிக்கும் Style ம், அந்த இரத்த துளி Piano வில் சிதறும் ஓர் காட்சியும் போதும் … அவளின் வன்முறை நிறை ஆளுமையை சொல்ல. இவ்வளவு எதிர்ப்பு இருந்தபோதிலும், அந்த ஆசிரியரின் Piano வாசிக்கும் திறமை தான் மாணவியை கட்டிப்போடுகிறது. கடைசி காட்சியில் அவள் வாசிக்கும் அழகில் நீங்கள் சிலிர்க்க போவது உறுதி ! ஆம். அந்த 4 நிமிடங்கள் தான் இரு Characters க்கும் மகிழ்வான தருணம் !
நீங்கள் ஒரு Photographer ஆ ? இந்த படத்தின் காட்சி அமைப்பு visual by visual ஆக உங்களுக்கு …இந்த படம் மிக பிடிக்கும் ! அப்படி ஒரு காட்சி அமைப்பு. குறிப்பாக சாலையில் ஆசிரியை அமர்ந்து இருக்கும் காட்சிகள். அருகே மௌனமாக இருக்கும் சுவர் ஆயிரம் கதை பேசுகிறது. ஒவ்வொரு காட்சியும் ஒரு புகைப்படம்.
மொத்த team க்கும் வாழ்த்துக்கள் !
💐💐💐