படம் சொல்லும் பாடம் – 028
#MyMoviesList : 014
#Seven / English / Netflix
💐💐💐
ஒரு கொலை. அதை கண்டுபிடிக்கும் Morgan Freeman க்கு நுனி மூக்கு வியர்க்கிறது. ” இது ஒரு கொலையல்ல. நடக்கப்போகும் ஏழில் முதல் கொலை ” என்று யோசிப்பதற்குள் இன்னும் இரண்டு கொலைகள். இதற்கிடையில் இன்னொரு துப்பறிவாளர் Brad Pitt ன் அதிபுத்திசாலித்தன மற்றும் Egoistic குணாதிசயங்கள். முதலில் ஒதுங்கி, பின் இணைந்து .. ஆரம்பிக்கும் படம் முடியும் வரை .. ஒரே ஒரு வார்த்தையில் சொன்னால் ….செம்ம படம் !
Morgan Freeman வசம் இருக்கும் ஆளுமையில் அவரின் குரல் மிக குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவரின் தீர்க்கமான பார்வை. முகத்தில் வைத்திருக்கும் ton கணக்கில் அமைதி. புத்தகம் படித்து வைத்த அறிவில் இருந்து, ஒவ்வொரு Author ன் பெயர் சொல்லி கொலையாளியை நெருங்கும் நுட்ப அறிவு, Brad Pit ஐ ஆசுவாசப்படுத்தும் பெரிய மனுஷத்தனம் .. இந்த மனிதரின் நடிகனை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவர் அமைதியாக, நேராக பார்க்க நமக்குள் கதையின் அடுத்த நிகழ்வு புரியும் மாயம் தான் இந்த ஆளுமையின் வசீகரம் !
Brad Pitt அப்படியே Morgan Freeman க்கான Contrasting ஆளுமை. நடிப்பில் அசத்தி இருக்கிறார். இயக்குனர் இருவரை இந்த role க்கு இவர் என்று select செய்த போதே .. இந்த படத்தின் வெற்றியும் நடிப்பும் உறுதி செய்யப்பட்டு இருந்திருக்கும். அடிபட்ட பாம்பாக கொலையாளியை தேடும் Brad Pitt ன் நடிப்பு சரியான வேகம் !
படத்தில் இன்னொரு அட்டகாச Character Kevin Spacey. மனிதர் என்னமாய் நடித்திருக்கிறார். கடைசி 25 % அளவிற்கு தான் அவரின் வருகை இருந்தாலும், அந்த முக அமைதியும், ஏளனமும், அறிவு சார் பதிலும், சிரித்த ஆனால் தன் இலக்கை நோக்கி நகரும் பாங்கும் … வேற level !
கதை இருக்கட்டும். படம் ஆரம்பித்ததன் முதல் இறுதி வரை அப்படி ஒரு வேகம் என்பது கண்டிப்பாக இயக்குனரின் திறமை தான் ! Brad Pitt மனைவி, Morgan Freeman சந்திக்கும் காட்சிகள் உணர்வுபூர்வ Visuals. கடைசி காட்சியில் அந்த உணர்வு தான் நம்மை ஆட்கொள்கிறது !
மொத்த Team க்கும் வாழ்த்துக்கள் !
💐💐💐