படம் சொல்லும் பாடம் – 030
#MyMoviesList ; 016
#Trance / Malayalam / Prime
💐💐💐
மதம் / பழக்க வழக்கம் என்கிற பெயரில் …நடக்கும் முட்டாள்தனங்களை அதன் பின்னே இயங்கும் பெரும் கைகளின் நீள் விரல்களையும் அடையாளம் காட்டும் படம்.
தன்னம்பிக்கை பயிற்சியாளர் க்கு வேறு ஒரு முகம் இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என போதிக்கும் நிகழ்வில் இருந்து ஆரம்பிக்கிறது படத்தின் அதிகார மையம். அதை ஒத்துக்கொள்ளும் போது பகத் என்னும் நடிகனின் இன்னொரு நடிப்பு பக்கம் ஆரவராமாக வெளிவருகிறது. மருத்துவ ஆடையுடன் தனக்கு மேலே இருப்பவர்களை பார்த்துக்கொண்டே ஒரு ஆட்டம் போடுகிறார் பாருங்கள் அங்கே ஒளிந்திருக்கிறான் இந்த நடிகன்.
மூட நம்பிக்கைகள், அதிசயத்தை கண் முன்னால் பார்த்தால் தான் தன் கடவுளையே நம்பும் மனிதர்கள், அவர்களுக்கென்றே சில ” Trance காட்சிகள் “, மத போதகர்களின் ( போதைகளின் ) இன்னொரு வாழ்க்கை அமைப்பு … தோலை உரித்து எடுத்து எறிந்து இருக்கிறார்கள். இந்த துணிச்சலும், இதை வெளியிடும் துணிச்சலும் நிறைந்த கேரள ஆளுமைகளுக்கு வணக்கம்.
மீத அனைத்து நடிகர்களும் சும்மா. பகத் மட்டும் தான் இங்கே ! ஆரம்ப கால பகத் தின் அந்த உடை, அந்த தலை முடி வாறல், அந்த ” உங்களால் முடியும் ” Trainer வாழ்க்கை … அசத்தல். அதில் இருந்து அப்படியே “போதிக்கும் ” வாழ்க்கை .. என்ன ஒரு மாற்றம் – நடை உடை மொழி அனைத்திலும் ! மேடையில் ஒரு குதி குதிக்கிறாரே ….?! … சாரே .. ஒரு Award கண்டிப்பாக இருக்கும் சாரே !
இது ஒரு சாதாரண படம் என்று அங்கே இங்கே பார்த்தேன். ஆமாம். நடப்பவைகளை அப்படியே சொல்வதால் சாதாரணாமாகி விடும் கதை தான். ஆனால் .. இன்னொரு மாநிலத்தில் இப்படி ஒரு கதையை முழு நீள படமாக எடுக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான் !
வாழ்த்துக்கள் மொத்த team க்கும் !
💐💐💐