படம் சொல்லும் பாடம் – 029
#MyMoviesList : 015
#22July / English / Netflix
💐💐💐
மற்ற நாட்களை போல அந்த நாள் விடிகிறது. ஒரே ஒரு மாறுதலுடன். இரண்டு குண்டு வெடிப்புகள். ஒன்று Prime Ministerன் அலுவலகத்திற்கு அருகில். இன்னொன்று ஒரு தீவில் – ஆனால் அங்கே தேடி தேடி சுட்டுக் கொல்லும் கொடிய நிகழ்வாக ! தீவில் மாணவ மாணவியர் இறந்து போகிறார்கள். பொது இடத்தில் ஒரு பெரும் கட்டிடம் உருக்குலைந்து போகிறது.
இப்படி ஆரம்பிக்கும் படம் பேய் ஓட்டம் ஓடுகிறது. குண்டு வைத்தவனை பிடித்து நிமிர்ந்து நின்றால் .. அவன் demand வைக்கிறான். அப்படி செய்யவில்லை என்றால் வேறு இடங்களில் வெடிக்கும் என்கிறான். மொத்த நாடும் விழிக்கிறது. படம் அடுத்த நிலையை அடைகிறது.
அண்ணன் தம்பி இருவர் இந்த துப்பாக்கி சூட்டில் மாட்டிக்கொள்ள .. அண்ணனுக்கு மூளை க்கு அருகே வரை குண்டு ரவை பாய, தம்பி தப்பிக்கிறார். இவர்களின் அம்மா மேயர் ! இதற்கிடையில் குண்டு வைத்தவனுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்.
நீதிமன்றம். வாதம். பிரதி வாதம். தான் சரியில்லை என்று நடுநிலை குழு அமைத்து தன் தவறை ஆராயும் Prime Minister அண்ணன் தம்பியில் மருத்துவமனையில் இருந்து குணமாகி வெளியே வரும் அண்ணன் நீதிமன்றம் வந்து பேசும் இறுதிக்கட்ட காட்சி … அட்டகாசமாக இருக்கிறது படம் !
நம் நாடு நமக்கே …மற்றவர்கள் இங்கே இருக்க வேண்டியதில்லை அல்லது நாமே முன்னுரிமையாக இருக்க வேண்டும் – இதுதான் குண்டு வைப்பவனின் / சுட்டு கொல்பவனின் கோரிக்கை ! எல்லோருக்குமான நாட்டில் … இப்படி ஒரு வெறித்தனதுடன் துப்பாக்கி சூட்டில் இறங்கும் அந்த நடிகனை பாராட்ட வேண்டும். என்ன ஒரு நடிப்பு முகத்தின் கொடூரத்தில் ! விசாரணையின் போது காண்பிக்கும் அலட்சிய முகம் ! யார் இந்த நடிகர் ?
அண்ணனாக வரும் Character ன் நடிப்பு இன்னும் அழகு. வலியை தெரிவிக்கும் முகத்தில் அப்படி ஓர் உணர்வுக் குவியல் !
நீதிமன்ற காட்சிகள் அனைவரின் வார்த்தையும் கேட்கப்பட்ட வேண்டும் – என்கிற பொதுநிலைத்தன்மையோடு!
கிட்டத்தட்ட ஒரு குண்டுவெடிப்பு, துப்பாக்கி சூடு, அதுசார் விசாரணை காட்சிகள், நீதிமன்றம், பிரதமர் …என்று ஒரு நாட்டுடன் பயணித்த உறவு. நார்வே யின் பனி படர் மலைகள் காட்சி அவ்வப்போது !
வாழ்த்துக்கள் Team.
💐💐💐