படம் சொல்லும் பாடம் – 031
#MyMoviesList ; 017
#EyeintheSky ; English / Netflix
💐💐💐
ஒரு தீவிரவாத குழு. அதன் இருப்பிடம் ஒரு நாட்டுக்கு தெரிந்ததும் அவர்களை உயிரோடு பிடிப்பதற்கான முயற்சிகளை செய்ய ஆரம்பிக்கிறார் இதற்கான பொறுப்பில் இருக்கும் Captain. அவருக்கு கீழ், மேல் இயங்கும் படை. கண் எதிரே இருக்கும் Screen ஐ வைத்து அத்தனை இயக்க அசைவுகளையும் கையில் வைத்திருக்கும் தொழில்நுட்ப வசதி. Target க்கு அருகேயே இருந்து local வேவு பார்க்க மனிதர்கள். ஒரு Button ஐ தட்டினால் .. அந்த கூட்டத்தை அப்படியே அழிக்க முடியும். இவ்வளவு இருந்தும் ?
ஒரு சிறுமி ரொட்டி விற்க வருகிறாள். அவள் அந்த தீவிரவாத குழு இருக்கும் இடத்திற்கு அருகில் தான் ரொட்டி விற்க ஆரம்பிக்கிறாள். இப்போது Rocket அனுப்ப ஒரு Button ஐ அழுத்தி முடிவெடுக்க வேண்டிய இருவர் தடுமாறுகிறார்கள். போர் என்றால் கண்ணை மூடிக்கொண்டு அனைவரும் இரக்கமே இல்லாமல் இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் … இந்த படம் அந்த நினைப்பை மாற்ற முயற்சிக்கும். ஒரு முடிவுக்கு பின் எவ்வளவு முடிவுகள், மனிதர்கள், சூழ்நிலைகளின் பங்கு இருக்கிறது ? ஹப்பா … என்று நம்மை யோசிக்க வைக்கிறது படத்தின் ஓட்டம் !
Helen Mirren என்கிற நடிகை பின்னியெடுகிறார். அவருக்கு அவரின் இலக்கை அடைந்தே ஆக வேண்டிய சூழ்நிலை. Alan Rickman – பக்கத்தில் எல்லாம் தயாராக இருந்தும் …அதை உபயோகிக்க முடியா கையறு நிலை ! EMotions ஐ முகத்தில் காட்டும் விதம் அருமை ! இந்த இருவரை போலவே ஒவ்வொருவரும் அவரவர் Role ஐ கன கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
” In the War, Truth is the First Casualty ! ” என்று துவங்கும் படம் பல செய்திகளை சொல்கிறது. அழகாக. நிதானமாக. ஆனால் நல்ல வேகத்துடன்.
மொத்த team க்கும் வாழ்த்துக்கள்.
💐💐💐
