படம் சொல்லும் பாடம் – 032
#MyMoviesList ; 18
💐💐💐
ஒரு இளம்பெண் ஆசிரியர். பழங்குடி மக்களின் குழந்தைகளுக்க்கு சொல்லி தர விரும்புகிறார். வழக்கம்போல பிரச்சினைகள். கடைசியில் என்ன ஆகிறது என்பது கதை.
கதை இருக்கட்டும். அந்த பெண் ஆசிரியருக்கு அப்புறம் வருகிறேன். அந்தக் குழந்தைகள் ? அப்படியே நெஞ்சை அள்ளிக்கொள்ளும் பார்வை. பேசாமலே பேசும் விழிகள். பழங்குடி மக்களுக்கே உரிய உடை, நடை, உடல் மொழி. நடிக்க வைத்தார்கள் என்று சொன்னால் நம்பவே முடியாது. ” பென்சில் வைத்திருந்தால் நோய் வரும் ” என்ற நம்பிக்கைக்கு இடையே அவர்கள் படிக்க விரும்பும் அதிசயம்… சரியாக விடை சொன்னால் ” King of Diseases ” என்று தங்களையே கிண்டலடித்து கொள்ளும் மனப்பான்மை… என்று அசத்துகிறார்கள். ஆசிரியர் நம்மை விட்டு செல்கிறார் என்றவுடன் ஓடி வருகிறார்களே .. அங்கே இருக்கிறது அவர்களின் யதார்த்த நடிப்பு !
பெண் ஆசிரியர் ஒரு பக்கம் இன்னொரு அசத்தலான நடிப்பு. ஒரு குறிப்பிட்ட மாணவன் படிக்க வேண்டும் என்கிற எண்ணம். அப்படி அந்த மாணவன் படிக்கும்போது கடைசி காட்சியில் வரும் கண்ணீர் … ஆசிரியர்கள் பார்க்க வேண்டிய படம் இது.
காட்டிற்குள் எடுக்கப்பட்ட விதமும் அருமை. அந்த பெரு மரத்தில் ஏறும் விதம், Cartoon கதை சொல்லல் …என்று அசத்தல் !
முதல் பாதியில் மிக மெதுவாக. ஆசிரியரை வெளியேறு என்று சொன்னதும் கொஞ்சம் வேகம் பிடிக்கும் கதை.. ஆனாலும் மனம் கூடவே மெதுவாய் இழை ஓடும் கதை.
மொத்த Team க்கும் வாழ்த்துக்கள்.
💐💐💐