நான் எனப்படும் நான் : 073
#WhoIsJay ; 048
Positive Negative இப்படி இரண்டு விஷயங்களை மக்கள் நிறைய குழப்பி கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. முதலில் இப்படி ஒன்று இருக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். இந்த இரண்டுமே ” Pre Constructed ” மனநிலை தான் ! இந்த Illusion மனிதர்களை கொஞ்சம் கவனிப்போம்.
1. Positive மனிதர்கள் ;
கை வெட்டப்பட்டு இரத்தம் வந்துகொண்டு இருக்கும். ஆனாலும் ஒன்றுமே இல்லை என்று சிரிப்பார்கள். இதற்கு பெயர் Positivity என்பார்கள். என்னை கேட்டால் இதற்கு பெயர் முட்டாள்தனம். இல்லாததை கற்பனை செய்து சிரிப்பதால் அது Positivity என்று யார் சொல்லி கொடுத்தது ?
2. ஒரு நஷ்டம் வந்திருக்கும். அவ்வளவு தான் இதோடு நாம் முடிந்தே போனோம் என்று புலம்புவார்கள். இனி எழ வாய்ப்பில்லை என்று யோசிப்பார்கள். தற்கொலை செய்வோம் என்றும் தோன்றும். இதுவும் இல்லாத ஒன்றை நினைத்து வருவது தான். ஆம். ” இதோடு முடிந்து போனோம் ” என்று முடிவெடுக்க நீங்கள் என்ன கடவுளா ? இல்லை இயற்கையா ?
இந்த இரண்டு மனிதர்களை கடந்து கொஞ்சம் சுவாரஸ்யமான களம் நோக்கி வருவோம். அங்கே தான் உண்மையான மனிதர்கள் இருக்கிறார்கள்.
1. யதார்த்த மனிதர்கள் ;
Case Study ;
கை வெட்டப்பட்டு இருக்கிறது. உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும். Bike இருக்கிறது. ஆனால் நாம் ஓட்ட முடியாது. உதவி வேண்டும். இங்கே இருந்து மருத்துவமனை செல்ல 15 நிமிடம் பிடிக்கும். Doctor ஐ கூப்பிட்டு சொல்ல வேண்டும். அவர் தேவையானவற்றை செய்து வைப்பார் .. என்று யோசிப்பார்கள் ! ஆம். அவ்வளவு வலிகளுக்கு இடையேயும் !
ஒரு நஷ்டம் வந்திருக்கும். அதை இப்போதுள்ள.சூழ்நிலையில் எப்படி ஈடுகட்டுவது என்று யோசிப்பார்கள். என்ன வகையில் பணம் மீண்டும் ஈட்ட முடியும் என்று ஒரு சிறிய கணக்கு போடுவார்கள். கணக்கை சரி பார்த்துவிட்டு ஒரு நல்ல தூக்கம் போடுவார்கள்.
2. யதார்த்தத்தில் 10 – 30 % மிகை ;
13 அல்லது 10 நிமிடத்தில் எப்படியாவது செல்ல முடியுமா என்று யோசிப்பார்கள். வேறு ஒரு வழி புலப்படும். அந்த வழியாக சென்று மருத்துவமனையை அடைவார்கள்.
தூங்கிய பின் மீண்டும் எழுந்து அந்த கணக்கை மீண்டும் கவனிப்பார்கள். வேறு எந்த வழியிலாவது பொருளை நியாயமாக ஆனால் விரிவாக ஈட்ட முடியுமா என்று யோசிப்பார்கள். இன்னும் சில வழிகளையும் கண்டுபிடிப்பார்கள். உடன் விரைந்து செயல்பட வேண்டியதை உணர்ந்து தன் புதிய வாழ்வை ஆரம்பிப்பார்கள்.
3. யதார்த்தத்தில் 90 % மிகை ;
அப்படியே ஒரு Aeroplane பிடித்து ஒரே நிமிடத்தில் மருத்துவமனை க்கு என்று
யோசிப்பவர்கள். இவர்கள் மேலே சொன்ன Positive மனிதர்கள் Category. வேலைக்கே ஆகாத மனிதர்கள் இவர்கள்.
கணக்கிலேயே நஷ்டத்தை சரி செய்து கனவில் மிதக்க ஆரம்பிப்பார்கள். மீண்டும் தூங்கி மீண்டும் எழுந்து கணக்கை மாற்றி மாற்றி எழுதி நஷ்டத்தை சரி செய்வார்கள்.
மீண்டும் சொல்கிறேன். Positive Negative என்று ஒரு வகையே இல்லை. அது மனித Argument சௌகர்யத்துக்கு ஏற்படுத்தப்பட்டது. இரண்டே வகை தான்.
1. யதார்த்த மனிதர்கள்
2. யதார்தத்தை 10 இல் இருந்து 30 % வரை எப்படி இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்கிற பார்வை உடைய மனிதர்கள்.
இதில் நீங்கள் எந்த வகை என்று யோசித்து பார்க்கலாம்.
நான் என்ன வகை என்றா கேட்கிறீர்கள் ?
இந்த Lock Down Announce செய்யப்பட்டதும் .. நான் யோசித்த விதத்தில் .. இது May வரை தொடரும் என்று கணித்தேன். அதே போல இதன் மீதான பொருளாதார பாதிப்பு இன்னும் ஒரு வருட அளவில் இருக்கும் என்று கணித்தேன். அந்த கணிப்புகளை சார்ந்த என் வாழ்க்கையை Design செய்து அதை நோக்கி பயணிக்க ஆரம்பித்தேன். இன்னும் ஒரு வருடத்திற்கு உணவு, உடை, இருப்பிடம் தவிர மீதம் எல்லாம் அநாவஸ்யம் என்று யோசித்தேன். அப்படியே பயணிக்கிறேன்.
புதிய எண்ணங்களும், புதிய நோக்கங்களுமாக வாழ்க்கை நகர்கிறது. நான் எந்த வகை மனிதன் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
💐💐💐
குறிப்பு ; அரசியல் பேசும் வாதிகளின் குரல்களும் நடவடிக்கைகளும் எனக்கு ஒருவித ” ஓ அப்படியா ” என்ற மனநிலையையே ஏற்படுத்துகின்றன. Breaking News என்றெல்லாம் எனக்குள் தெரிவதாக இல்லை. ( அப்படி தெரிந்தால் நீங்கள் Positive அல்லது Negative மனிதர்களாக இருக்க கூடும். உங்களை தான் தொலைக்காட்சிக்களுக்கு மிக பிடிக்கும் 😊😊 )
💐💐💐