படம் சொல்லும் பாடம் – 033
#MyMoviesList ; 19
#Capernaum / Netflix
💐💐💐
குழந்தைகளின் உலகம் நமக்கு புரிவதில்லை. அப்படி புரிய வேண்டும் எனில் இந்த மாதிரியான படங்களை பார்க்க வேண்டும். அதில் சொல்லப்படும் வார்த்தைகள் நம்மை நாம் குழந்தைகளுடன் வாழும் வாழ்க்கையை பற்றி யோசிக்க வைக்கும்.
தன் தங்கையை விற்க முனையும் அப்பா அம்மா. காரணம் ? இயலாமையை, கையாலாகாத தனத்தை காரணம் சொல்லும் வறுமை. தன்னால் முடிந்த எதிர்ப்பை காண்பித்து வெறுத்து வெளியேறும் அவன் காண்பிக்கும் பக்கங்கள் தான் படம். காட்சிக்கு காட்சி யதார்த்தமும், உணர்வு பூர்வமான புரிதல்களை கொண்டு வரும் பார்வைகளும் ….என்ன ஒரு படம் ! இப்போதே பார்த்து விடுங்கள் என்றே நான் சொல்வேன்.
யார் அந்த பையன் ? நடிப்பை எப்படி சொல்லி கொடுத்தார்கள் ? அல்லது அவனின் இயல்பே அதுதானா ? இந்த படத்தின் Character ம் அவன் சொந்த வாழ்க்கையும் கிட்டத்தட்ட நெருங்கி வருவதும் ஒரு காரணமா ? அசந்து போன நடிப்பு அது !
அவனுடன் பயணிக்கும் இரு அகதிகள். அம்மா மற்றும் பையன். அம்மாவின் நடிப்பு வேறு உயரம் என்றால் அந்த சிறு பையன் …இன்னொரு உயரம் ! வார்த்தைகள் இல்லை விவரிக்க.
Court காட்சிகள் தான் இந்த படத்தின் முதுகெலும்பு ! அம்மா அப்பாவை Sue செய்யும் 12 வயது மகன் தான் உட்பொருள். அவன் என்ன கேட்கிறான் என்பது எனக்கு உங்களுக்கு நமக்கு வாழ்க்கை பாடம்.
மொத்த Team க்கும் என் வாழ்த்துக்கள்.!
💐💐💐