நான் எனப்படும் நான் : 074
#WhoIsJay : 049
இந்த புகைப்படம் மறக்க முடியாத ஒன்று. இதில் இருப்பவர்களுக்கு இந்த காட்சி நிச்சயம் நினைவில் இருக்கும். மற்றவர்களுக்கு நான் சொன்னால் மட்டுமே புரியும்.
பொதுவாக என்னுடன் பயணிக்க விரும்புபவர்களுக்கு நான் சொல்லும் ஒரு விஷயம்… ” Tourist ஆக இருந்தால் என்னுடன் பயணிக்க வேண்டாம். Traveller ஆக இருந்தால் வரவும் “. அதற்கான விளக்கமும் நான் கொடுப்பது உண்டு. ” இத்தனை மணிக்கு ஆரம்பித்து இத்தனை மணிக்கு இங்கே சாப்பாடு, இங்கே இந்த spot, இத்தனை மணிக்கு room க்கு வருவோம் ” என்றெல்லாம் முடிவு செய்து கிளம்பினால் … Tourist. ” Just கிளம்பறோம் .. என்ன வருதோ அதை பார்ப்போம் ” என்று கிளம்புகிறவர்கள் Traveller. நான் ஒரு Traveller. பயணத்தின் போது .. என்னிடம் எந்த திட்டங்களும் இருப்பதில்லை.
இப்படி சொன்ன பின்பும் .. ஒரு ஆளுமை இந்த பயணத்தில் எங்களுடன் கலந்து கொண்டு .. ” அதை பார்க்கவில்லை, இதை காண்பிக்கவில்லை, நல்ல சாப்பாடு இல்லை …” என்றெல்லாம் புலம்பி கொண்டு இருந்தது. என்னிடம் அல்ல. போவோர் வருவோரிடம் … எல்லாம். அந்த தருணத்தில் ஒரு சிறு கூட்டம் வைத்து அந்த ஆளுமைக்கு ” கொடுக்க வேண்டியதை கொடுத்த தருணம் தான் ” இது ! அது மட்டுமல்ல. இந்த பயணம் முடித்து வந்தவுடன், அந்த ஆளுமை இந்த பயணத்திற்காக கொடுத்த பணத்தையும் அந்த ஆளுமைக்கே திருப்பி அனுப்பினேன். ( அதையும் அழகாக பெற்றுக் கொண்ட ஆளுமை தான் அது ! என்னவோ மனிதர்கள் !! 😊😊 ).
நான் சொல்ல விரும்புவது இதுதான். என்னுடன் பயணங்களில் கலந்து கொள்ள விரும்பினால் ஒரு Traveller ஆக இருந்தால் மட்டுமே வாருங்கள். Tourist ஆக இருந்தால் …உங்கள் திட்டப்படி பயணியுங்கள். என் திட்டங்களில் ஒரு நாடோடித் தன்மை இருக்கும். அதாவது .. கிளம்புவதும், பின் சேர்வதும் இயற்கையின் கையில் என்று ! என்னிடம் ” எப்போ போய் சேர்வோம் ” என்று பயணத்தில் கேட்கப்படும் போதெல்லாம் எனக்கு சிரிப்பு மட்டுமே வரும். பின்னே ? இயற்கை முடிவு செய்யும் பயணத்தில் நான் எப்படி Announcer ஆக இருக்க முடியும் ?
ஓவ்வொரு பயணத்திலும் இப்படி ஒன்று இரண்டு மனிதர்களை நான் காண்கிறேன். அவர்களை சிரித்த முகமாகவே விலக்குகிறேன். Tourist ஆக இருந்தால் நீங்கள் பயணிக்க வேண்டிய திசை வேறு. Traveller ஆக இருந்தால் நீங்கள் பயணிக்க வேண்டியது இந்த உலகில் ஒரே ஒருவருடன். அது உங்களின் மனம் !
💐💐💐