நான் எனப்படும் நான் : 075
WhoIsJay ; 50
💐💐💐
இந்த #5pmLive நிகழ்ச்சிக்கு நல்ல Feedback. அதைப்பற்றி இங்கே கொஞ்சம் பகிரலாம்.
Lockdown என அறிவிப்பு வரும் முன்பே .. ஆங்கில ஊடகங்களை ( இந்திய ஆங்கில ஊடகங்கள் அல்ல ! ) follow செய்து கொண்டிருந்ததால் … இது வரும் என்று தெரிந்து இருந்ததால் .. குறிப்பாக பெரிய அளவில் அதாவது நீண்ட நாட்களுக்கு lockdown வரும் என்று தெரிந்து இருந்ததால் …முதல் மூன்று நாட்கள் தூங்க முடிவு செய்து அதை செம்மையாக செய்தேன். என் வாழ்நாளின் பெரும் தூக்க நாட்கள் அவை. நான் அப்படி தூங்கியதே இல்லை. அதற்காக இயற்கைக்கு நன்றி.
அடுத்ததாக நான் எழுத நினைத்த புத்தகம் எழுதலாம் என்று தோன்றியபோது … மக்களின் எண்ண அலைவரிசையை கவனிக்க நேர்ந்தது. Stress அப்போதே மக்களுக்கு அதிகமாக மாறத்தொடங்கி இருந்தது.
1. இறப்பு செய்திகளால்.
2. முட்டாள்தன அரசியல் முடிவுகளால்
3. மக்களின் செய்கைகளால்.
அப்போது எனக்குள் தோன்றிய சிந்தனை – நம்மால் முடிந்தவற்றை நம் வட்டார மனிதர்களுக்கு செய்ய வேண்டும். வெளியே செல்ல முடியாது .. என்னும்போது .. என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
பொதுவாக பயணங்களில் நான் Live போடும்போது நல்ல 80 களின் பாடல்களை play செய்வது உண்டு. அதற்கு followers ம் உண்டு. ஆனால் சட்டென ” நாம் live இல் பேசினால் என்ன ? ” என்று தோன்றியது. சரி. என்ன பேசுவது ?. யோசித்தபோது மீண்டும் மக்களின் Stress மனதிற்குள் ஞாபகம் வந்தது. அப்போது தோன்றிய யோசனையில் ஒன்றுதான் Live நிகழ்வு.
பேச ஆரம்பித்த பின் தனி செய்திப் பெட்டியில் கேள்விகள் வர ஆரம்பித்த பின்தான் புரிந்தது – சரியான முடிவை தான் எடுத்திருக்கிறோம் என்பது. அன்று ஆரம்பித்த பயணம் இன்றும் தொடர்கிறது. இன்னும் தொடரும்.
தனி மனித வளர்ச்சிக்கான உலகம் மிகப்பெரியது. அதில் பயணிக்க தனி அனுபவமும், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறனும் வேண்டும். பயிற்சியாளர் அனுபவத்தில் அது இருப்பதினால் … இந்த பயணம் உடனடியாக ஆரம்பித்து, பலரின் பங்கேற்புடன் தொடர்கிறது. சட்டென வரும் கேள்விகளுக்கு ஏதோ பதில்களை சொல்லிவிட முடியாது. அதே போல பேச வேண்டியவை சிறப்பாக சொல்லப்பட வேண்டும். எனக்கான பார்வை Window cellphone அகலம் மட்டுமே என்பதால் அதற்குள் என்னை நான் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் வேறு. ஆனாலும் … செய்வன திருந்த செய் தொடர்கிறது.
நிறைய Feedback எம்மை நிறைத்து நின்றாலும், Kavitha Suresh ன் Feedback மிக நெருக்கமான ஒன்று. நாம் நினைப்பதை கிட்டத்தட்ட அப்படியே ஒருவரால் எழுத முடிந்தால் அது சிறப்பான அலைவரிசை Feedback ஆக இருக்கக்கூடும். Kirthika Tharan இதைப்பற்றி எழுத ஆரம்பிக்க.. இன்று 41 ஆவது நாளாக …இது தொடர்கிறது.
Anuthama Radhakrishnan ன் Poster Designing இங்கே மிக முக்கியமானது. நான் பேசப்போவதை உணர்ந்து செய்யப்படும் அந்த Posters சந்திக்க வேண்டியவர்களுக்கு Visual ஆக சொல்லும் message மிக முக்கியமான ஒன்று.
அடுத்ததாக இதே live இல் ஒரு Surprise வர இருக்கிறது. அதை விரைவில் fb யில் காணலாம்.