நான் எனப்படும் நான் : 077
#WhoIsJay : 052
💐💐💐
என்னிடம் வேறு வேறு தருணங்களில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு என் பதில்களை கவனித்தால் என் பார்வைகளின ஆழத்தை கவனிக்கலாம். நீங்கள் பார்க்கும் நான் அல்ல நான் என்பதும் உங்களுக்கு புரியலாம்.
💐 Diet இல் இன்னும் இருக்கிறீர்களா ? கொஞ்சம் Weight போட்டு இருப்பது போல தெரிகிறதே ?
ஆம். Diet டில் தான் இருக்கிறேன். ஆம். Weight 1.5 கிலோ அதிகமாகி இருக்கிறேன். வழக்கமான ஓட்டம் தடைப்பட்டிருக்கிறது அல்லவா ?
என்னுடைய நோக்கம் இந்த Lockdown காலகட்டத்தில் Weight Reduction அல்ல. Stress இல் இருக்கும் தெரிந்த தெரியாத நட்புக்களுக்கு என்னால் இயன்ற மன நேரங்களை கொடுப்பது. இது தான் தற்போதைய தேவை.
உடலை என்னால் மீட்டு எடுக்க முடியும். அந்த நம்பிக்கை இல்லாதவர்களுக்கு தான் பயம் இருக்கும். எனக்கு இல்லை.
💐 அரசாங்க முயற்சிகளை பற்றி உங்களின் பார்வை ?
21 நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று யோசித்ததே தவறு. ” Test செய்யவே வேண்டாம், எல்லோருக்கும் செய்ய வேண்டாம். அறிகுறிகள் உள்ளவருக்கு கட்டாயம் செய்ய வேண்டும். Test செய்வதை அதிகப்படுத்த வேண்டும். ” இதுதான் அரசியல்வாதிகளின் கடைசி 70 நாள் நிலை. முதல் நாளில் இருந்தே இந்த கடைசி நிலையை கேரளா எடுத்திருப்பதை உணராத அல்லது பேசாத பிரதமர் தான் ஒரே இந்தியா என்றும் உலகமே திரும்பி பார்க்கிறது என்றும் பேசிக்கொண்டு இருக்கிறார். இதில் கைதட்டல் கால் தட்டல் Torch light – 09 மணிக்கு 09 தடவை என்கிற புத்திசாலித்தனம் வேறு. மருத்துவ மனிதங்களுக்கு நன்றி சொல்லவேண்டிய குறிப்பான தருணம் இனிமேல் தான் வர இருக்கிறது. இப்போதும் சொல்கிறேன் இது ஒரு #PoorGovernance . ” இவர் திமுக போல ” என்று நீங்கள் நான் மேலே சொன்னதை புரிந்து கொண்டால் உங்களின் அறிவுத் தெளிவை நினைத்து நான் சிரித்து கடப்பேன்.
💐 #5pmLive எப்படி திடீரென்று ?
திடீரென்று எல்லாம் அல்ல. முதலில் நேரம் இல்லை. ஆதலால் இதே பார்வைகளை எழுதிக்கொண்டு இருந்தேன். இப்போது live இல் செய்கிறேன். அவ்வளவே.
💐 பார்த்தால் கோபமாக தெரிகிறீர்கள் …ஆனால் பழக இனிமையாக இருக்கிறீர்கள் ?
அப்படியா ? I am not what you think who I am.
😊😊😊
💐 நீங்கள் பேசும் ஆங்கிலம் யதார்த்தமாக இருக்கிறது. எப்படி ?
முலாம் பூச்சுகளை எண்ணங்களில் கலப்பது இல்லை.
💐 உங்களுக்கு நிறைய Followers போல ?
தவறு. தன்னை Follow செய்பவர்கள் மட்டுமே என்னுடன் பயணிக்க முடியும்.
💐 Course இன் போது வேறு ஒரு Jay பார்க்கிறேன். அது எப்படி ?
தன்னிடம் மாற்றம் வேண்டும் என்று வருபவர்களை நான் சந்திக்கும் space தான் Courses. அங்கே நிச்சயம் என் யதார்த்தம் இன்னொரு நிலையில் தான் இருக்கும்.
💐 Future Unfolds பல மனங்களை யோசிக்க வைத்திருக்கிறது. அது பற்றி ?
சமீபத்திய நிறைவுகளில் இதுவும் ஒன்று. Zenlp Trainers அடுத்த நிலைக்கு நகர்வதில் மகிழ்ச்சி.
💐 அரசாங்க பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் செய்யும் பயிற்சி பற்றி ?
அது என் கனவு விதை. மண் இப்போது வழி விட ஆரம்பித்து இருப்பதை இயற்கையின் ஆசீர்வாதமாய் எடுத்துக்கொள்கிறேன்.
💐💐💐