நான் எனப்படும் நான் : 078
#WhoIsJay : 053
திறமைகளை மட்டும் அடையாளம் காண நினைக்கும் ஆளுமைக்கு என்னவெல்லாம் பிரச்சினைகள் வரும் என்று நீங்கள் நினைத்து பார்த்தது உண்டா ?
சிலவற்றை சொல்கிறேன்.
💐 சந்தேகம் ;
திறமையை உயர்த்த உதவும் பார்வையில் பேசினால் முதலில் கிடைக்கும் பார்வை இது. இது இருக்க வேண்டும். ஆனால் இது மட்டுமே இருப்பது உதவி செய்யாது. யார் இவள் ? இவன் ? எதற்கு நம்மை நோக்கி வருகிறாள் / வருகிறான் பகுதி தான் முதலில் திறமையை அடையாளம் காண நினைப்பவருக்கு பெரும் சவால்.
💐 பொருளாதார பார்வைகள் ;
திறமை இருப்பதாக சொல்லி நம்மிடம் இருந்து வியாபாரம் எதிர்பார்க்கிறார்களோ என்ற பார்வை. இதற்கு ஆண் பெண் என்றெல்லாம் பாகுபாடு இல்லை. திறமை என்று ஒன்று இருந்தால் அது அடுத்த உயரம் அடைய வேண்டும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்களை சொன்னால் உடனே இதில் வியாபாரம் ஏதோ இருக்கிறதோ என்று நினைப்பது. இதுவும் திறமையை வெளியே கொணரும் ஆளுமைக்கு பெரும் சவால்.
💐 ” வேறு ஏதாவது ” காரணம் இருக்குமோ ?
இன்றைய நிலையில் இந்த பார்வை தவிர்க்க முடியாதது. ஆனால் நம்மிடம் இருக்கும் திறமையை ” சரியான Evidence ” உடன் ஒருவர் சொல்லும்போது … அவரையும் அவளையும் நம்பாமல் வேறு யாரை நம்பி அடுத்த உயரத்திற்கு செல்ல போகிறோம் ? ஆச்சர்யம் தான் !
💐 Promote செய்வதாக நினைக்கும் பார்வை ;
திறமையை கவனித்து அடுத்த நிலை நோக்கி திறமையை இழுக்கும் போது … ஒருவரை மட்டும் ஏன் அப்படி செய்ய வேண்டும் என்று நினைக்கும் பார்வை. அந்த திறமை ஏன் நம்மிடம் இல்லை என்று யோசிக்க வேண்டியதை விட்டுவிட்டு, Politics அது இது என்று குழப்பிக்கொள்ளும் பார்வை இது. உலகம் அடுத்தடுத்து வாய்ப்புகளை வழங்கிக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் நாம் கை நழுவிய வாய்ப்புகளையே பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அதனால் தான் இந்த பார்வை.
💐💐💐
இந்த பார்வையில் இருக்கும் இன்னொரு பக்கத்தை குழப்பிக்கொண்டு இந்த பார்வையை கவனிக்காமல் போனால் நம் திறமையை நாம் இழக்க கூடும். என்னை பொறுத்தவரை திறமை என்று ஒன்று இருக்கும் எனில் ( எல்லோரிடமும் உண்டு ) … அதை அடுத்த உயரத்திற்கு கொண்டு செல்லும் எண்ணங்களை ஒரு சிலரே வைத்திருப்பதையும், அவர்களையும் இந்த உலகம் மேற்சொன்ன பார்வைகளுடன் பார்த்துக்கொண்டே இருப்பதையும் கவனிக்க முடிகிறது.
MR ராதா ஒரு படத்தில் சொல்வார் … ” ஒரு சில பேர் தான் நல்லது சொல்வான். அவனையும் கேள்வி கேட்டே கொன்னுடுங்கடா ”
அதனால் தானோ என்னவோ .. பல திறமைகள் வெளிவருவதே இல்லை.
என் வாழ்வில் திறமைகளை மட்டுமே கண் கொண்டு பார்க்கிறேன். ( வேறு எதுவும் யாரிடம் இருந்தும் எனக்கு தேவையில்லை என்று சொல்லும் அளவிற்கு இயற்கை என்னை யதார்த்தமாய் வைத்திருக்கிறது ). அப்படி திறமையை கண் கொண்டு கவனித்து விட்டால் அதனை மேற்கொண்டு வர என்னால் இயன்ற முயற்சிகளை செய்கிறேன். திறமை இருப்பதாய் ஒருவர் நடிக்கவே முடியாது. திறமை என்று ஒன்று இருந்தால் அது மிளிர்வதில் நாம் அதை அடையாளம் காண முடியும்.
இந்த திறமைகளை அடையாளம் காண்பது எம் இறப்பு வரை தொடரும். குறிப்பாக மேற்சொன்ன பார்வை மனிதர்களை சந்தித்தாலும் – சிரித்துக்கொண்டே ! 😊😊