நான் எனப்படும் நான் : 081
#WhoIsJay ; 056
💐💐💐
ஒரு ஜென் துறவி யிடம் சீடர் சொன்னார்.
” அந்த காட்டுக்குள் போக எனக்கு பயமாக இருக்கிறது ”
ஜென் துறவி பார்த்துவிட்டு சொன்னார்.
” வா போகலாம் ”
துறவி வருகிறேன் என்றதும் கிளம்பினாலும் இன்னமும் பயம் சீடருக்கு.
” புலி இருக்குமோ என்று எனக்கு பயம் ”
கண்ணில் நேராய் அவனை பார்த்துவிட்டு ஜென் துறவி சொன்னார்.
” உண்மையை நெருங்குகிறாய் ”
காட்டுக்குள் செல்ல செல்ல சீடருக்கு இன்னமும் பயம்.
” பாம்பும் கூட இருக்கலாம் ”
உடனே பதில் வந்தது ஜென் துறவியிடம் இருந்து … ” உண்மையை நெருங்குகிறாய் ”
மொத்த காடும் சுத்தி வந்து காட்டை விட்டு வெளியேறி வந்ததும் சீடர் முகத்தில் சிரிப்பு ..
” பயம் போய்விட்டது எனக்கு. எதுவும் இல்லை போல இந்தக் காட்டில் ! இனி நான் காட்டுக்குள் எப்போது வேண்டுமானாலும் தனியாகவே செல்வேன் ”
ஜென் துறவி சொன்னார். ” உண்மையில் இருந்து விலகுகிறாய் ”
💐💐💐
எங்கெல்லாம் பயம் இல்லையோ அங்கே உண்மையில் இருந்து நாம் விலகுவதும், எங்கே எல்லாம் நம்மிடம் பயம் இருக்கிறதோ அங்கே உண்மையை நோக்கி நாம் நெருங்குவதுமாகவே வாழ்க்கை இருக்கிறது.
” இன்னும் கற்றுக்கொள்ள ஏதோ இருக்கிறது ” என்று நினைப்பவர்கள் உண்மையை நெருங்கி கொண்டிருக்க .. ” எனக்கு எல்லாம் தெரியும் ” என்பவர்கள் .. உண்மையில் இருந்து விலகிக்கொண்டு இருக்கிறார்கள்.
பயம் என்பது முன்னேறும்போது, தேடும்போது, முயற்சி செய்யும்போது, கற்கும் போது, உதவும் போது, விலகும் போது .. அனைத்து இடத்திலும் Moral பயமாக இருப்பது மிக நல்லது. ஏன் எனில் இன்னொரு உண்மையை நமக்கு உணர்த்த அது உதவிக்கொண்டே இருக்கும்.
ஆனால் ” எனக்கு எல்லாம் தெரியும் ” தான் இருப்பதிலேயே மிக Dangerous ஆன Behavior . உண்மையை நாம் அறிய முடியாத அளவிற்கு நம்மை வைத்திருக்கும் இந்த Behavior உள்ள மனிதர்களை நான் அவ்வப்போது கடப்பது உண்டு. அப்போதெல்லாம் .. ” ஹ்ம்மம் …. உண்மையில் இருந்து விலகி கொண்டு இருக்கிறார்கள் ” என்று சிரித்து கடப்பது உண்டு.
அப்படி ஒருவரை சமீபத்தில் கடக்க நேர்ந்தது.
” I am So and So and So and So … ”
என்று பேசிக்கொண்டே இருந்தார்.
நான் அமைதியாக இருந்தேன். அப்படி இப்படி இந்திரன் சந்திரன் .. பெருமைகளை பேசி முடித்தபின் கேட்டார் ..
” நீங்கள் பதிலே சொல்லவில்லையே ”
நான் பதில் சொன்னேன் ..
” I am Nothing and Nothing and Nothing and Nothing .. ”
இருவரும் பலமாக சிரித்தோம். அவர் எதற்கு சிரித்தார் என்று எனக்கு தெரியவில்லை. ( உங்களுக்கு தெரிகிறதா ? ). நான் எதற்கு சிரித்தேன் என்று எனக்கு கண்டிப்பாக தெரியும். ( உங்களுக்கு தெரிகிறதா ? )