Slogging Songs : 26
💐💐💐
6 இலட்சம் steps என்பது முதல் தடவையாக செய்யவில்லை. இதற்கு முன் பல முறை தொட்டிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் அதில் ஒன்று அல்லது இரண்டு 50K இருக்கும். ஆனால் முதன் முதலாக Consistent ஆக 20K என்று முயற்சி செய்ய ஆரம்பிக்கிறேன் என்பதால் இது கொஞ்சம் special.
💐💐💐
இன்று உடன் பயணித்த பாடல் ..
” ரோஜாக்களில் பன்னீர் துளி வடிகின்றதே … அது என்ன தேன் ? ”
அந்த Dark Red Backdrop இல் வழியும் பனித்துளி அப்படித்தான் தெரியும் அல்லது அதை அப்படித்தான் கேட்க தோன்றும். அது என்ன தேன் ? என்றால் யார் பதில் சொல்வது ? உண்மையை சொன்னால் .. பதில் தேவையற்ற கேள்வி அது. பின்னே ?Romance ன் சுகமே தெரிந்த பதில்களுக்கு கேள்வி கேட்பது தான். ” என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும் ” என்ற கேள்வியை கேட்காத தாம்பத்ய அழகு உண்டா ? பதில் தெரிந்திருந்தும் !
” அதுவல்லவோ பருகாத தேன். அதை இன்னும் நீ பருகாததேன் ? ”
Waiting அப்படி ஒரு அழகு காதலிக்கும் காலங்களில். பருகாததை நீ ஏன் பருக வரவில்லை என்ற கேள்வி மூலம் Waiting ஐ உடைத்து எறிய நினைக்கும் இந்த கேள்விக்கு பின் நிலவும் அமைதியில் Waiting எல்லாம் சுக்கு நூறாகும். Waiting கின் அழகு அது உடைவதில் தான் மிளிர்கிறது.
” பனிக்காலத்தில் நான் வாடினால்
உன் பார்வை தான் என் போர்வையோ ? ”
பார்வை போர்வையாகும்போது வார்த்தைகள் அதே போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும் – கிடைத்த இடைவெளியில். ஒரே ஒரு பார்வையில் பெரும் குளிரை சரியாக்கியவர்களும் உண்டு. குளிரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர்களும் உண்டு. தாம்பத்ய வாழ்வில் ” பார்வைகளுக்கு ” தனி இடம் உண்டு. ” பார்வைகள் ” என்று ஒரு புத்தகமே எழுத முடியும். எழுத வேண்டும். ( எழுதவா ? ).
” அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன்
அதற்காக தான் மடி சாய்கிறேன் ”
அணைக்காமல் குளிர் காய முடியும். தூர தேசத்தில் வாழ்பவர்கள் கணவனும் மனைவியுமாக எப்படி அணைத்து கொள்ள முடியும் என்றால் பதில் இந்த ஒரு வரி மட்டுமே ! அருகே இருக்கும்போது மடி சாய்ந்தால் அதே குளிர் காய்தல் நடந்து விடுகிறது. தாம்பத்ய உறவில் … காய்தல் – என்ன ஒரு மென் உணர்வு வாழ்க்கை முறை !
என்னுடைய All Time Fav Song. உங்களுக்குள் இந்நேரம் ஓட ஆரம்பித்திருக்க வேண்டும். அப்படி எனில் நாம் ஒரு ரசனை புள்ளியில் இருக்கிறோம். இன்னமும் ரசனைகள் தன்னை அவிழ்த்துக் கொள்ளட்டும். தன் அலைவரிசையை இனம் காணட்டும்.
நாளை இன்னொரு பாடலுடன்.