நான் எனப்படும் நான் : 087
#WhoIsJay ; 062
💐💐💐
மனம் மிக மகிழ்வாய் இருந்தால் அதற்கு ஒத்துழைத்த உடலுக்கு ஒரு Reward கொடுக்க தோன்றும் எனக்கு. இது என் வழக்கம்.
இந்த முறை Reward கொஞ்சம் வித்தியாசமாக. ஏற்கெனெவே பல வருடங்களுக்கு முன் பார்த்த The GodFather 1 2 3 பகுதிகளையும் பார்த்தால் என்ன என்று தோன்றியது. உடலிடம் கேட்டால் மகிழ்வில் குதித்தது. Beans Bag, Badam, Green Tea, கொஞ்சம் Seeds, dark room, எனக்கு மிக பிடித்த tv, யாருமற்ற வீடு, நான் விரும்பும் தலையணை, One Plus Mobile … ( Never Settle என்று அமைதியாக செல்லும் அதை முதன் முதலாக பார்த்து சொன்னேன் .. ” 100 நாட்களுக்கு பின் சில மணி நேரம் settle ஆகிக்கிறேன் … ” ) .. என்று என் உலகம் விரிந்தது. குறிப்பாக Mobile off mode டில். ( Very Unusual of me ! )
இந்த முறை 3 2 1 என்று பார்ப்போம் என்று சட்டென ஒரு உள்ளுணர்வு. அப்படியே பார்க்க ஆரம்பித்தால் .. மனம் இலயிக்கிறது. ஒரு வாழ்க்கை 09 மணி நேர படமாக மாறுவது எல்லாம் என்ன ஒரு பார்வை ! நிதானமாய் ஆனால் வாழ்க்கையை சொல்லிக்கொண்டே போகிறது படம். முதுமையில் இருந்து இளமை நோக்கி வந்தால் … மனிதன் ஆடி அடங்குதல் அல்லது அடக்கப் படுதல் … அவ்வளவே வாழ்க்கை ! நாம் நினைப்பது போல God Father Mafia படம் அல்ல. அப்படி பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் அப்படி தெரியலாம். ஆனால் … எவ்வளவு பெரிய பாடங்களை சொல்கிறது இந்த பட series ! கவனிப்போம்.
💐 ” குழந்தைகள் இல்லா வாழ்க்கை என்ன வாழ்க்கை ? என்று Al Pacino சொல்லும்போது சட்டென தைக்கிறது. எவ்வளவு இருந்தாலும் குழந்தைகள் இல்லை எனில் என்ன வாழ்க்கை அது ?
💐 முதல் இரண்டு பாகங்களில் இரண்டு மனைவிகள் என்று வாழும் Al .. மூன்றாம் பாகத்தில் பிரிந்த மனைவியுடன் மீண்டும் சேர நினைக்கிறார். மனைவி ஒப்புக்கொள்ளாமல் நகரும் போது தன் கண்ணிலேயே அவர் பேசும் காட்சி பெரும் வலி. இது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும். இருக்கும்போது ஆட்டம் போட்டுவிட்டு பின்னால் கண்ணே மணியே என்று கொஞ்சுவது உதவப்போவதில்லை ! ஆண் பெண்ணை அல்லது பெண் ஆணை பிரியும் முன் யோசிக்க வேண்டும்.
💐 Forgiving தான் பெரும் பலம் என்று மூன்றாம் பாகத்தில் பேசும் அதே Al இரண்டாம் பாகத்தில் என் எதிரிகளை கொல்லாமல் விடப்போவதில்லை என்று சீருகிறார். வயது நமக்கு மட்டும் ஆவது இல்லை. நமக்குள் இருக்கும் மிருகத்திற்கும் வயது ஆகிறது என்பது நமக்கு புரியவில்லை என்றால் இன்னொரு வலிமையான மிருகம் வந்து அதை புரியவைக்கும்.
💐 Marlon பேச்சை கேட்காமல் முதல் பாகத்தில் வேகமாக பேசும் அதே Al மூன்றாம் பாகத்தில் குழந்தைகள் பேசும்போது அமைதியாக நிற்பது கண்ணில் நீர் வரவழைக்கும். நமக்கு முன்னே ஓர் பெரும் பிம்பம் உருவாவது முக்கியம் அல்ல. அது கண் முன்னே உடைவது அல்லது Reality யை நோக்கி திரும்புவதில் இருக்கிறது வாழ்க்கையின் திருப்பங்கள்.
💐 இது என் Court – என்று இரண்டாம் பாகத்தில் சொல்லும் அதே Al மூன்றாம் பாகத்தில் மன்னிப்பு கேட்கிறார். அழுகிறார். எந்த Don ம் கடைசி காலங்களில் அழுவது இயல்பாகவே நடந்து விடுகிறது. Don ஒரு போலி பிம்பம் என்று உணரும் வரை Don கள் அழாமல் வாழ்கிறார்கள்.
💐💐💐
Marlon Brando, Al Pacino இருவரும் நடிப்பில் எவரெஸ்ட் உயரங்கள். இப்படி இனி நடிகர்கள் வாய்ப்பே இல்லை. அதிலும் Al கண்ணால் பேசும் காட்சிகளுக்கு … வாவ் மட்டுமே என் பதில். தலையை அசைத்து விட்டு பிறகு பேச ஆரம்பிக்கும் போது .. நமக்கு முன்னமே என்ன பேசப்போகிறார் என்று தெரிவதில் இருக்கிறது அந்த நடிகனின் வெற்றி. ( கமல் இதை Copy செய்வதும் ஞாபகத்தில் ! ).
ஆனாலும் Marlon தான் The Best. ஒரு பூனைக்குட்டியும் அவருமாக நிதானமாக தன் நண்பனுடன் பேசும் முதல் காட்சியில் .. மனிதர் எழுந்து நின்று, முன்னே வந்து பேசும்போது … படத்திற்கு 10/10 போட்டுவிட்டு எழுந்து வெளியேறி விடலாம். அப்படி ஒரு ஆளுமை – வார்த்தையில், பேச்சில், கண்ணில், பார்வையில், நிற்பதில், திரும்பி பார்ப்பதில் … Marlon .. மீண்டும் பிறந்து வாருங்கள் ! இப்போதைய Tech இல் உங்களின் நடிப்பை பார்க்க அளவிலா ஆர்வம் இருக்கிறது எனக்கு.
💐💐💐
Who is Jay யில் முதல் முறை படம் எழுதி இருக்கிறேன். ஆம். இங்கே நான் எழுதி இருப்பதில் பல வரிகள் ” இதுதான் Jay ” என்று என்னை புரிந்தவர்களுக்கு புரியும். புரிய வேண்டும்.
💐💐💐