நான் எனப்படும் நான் : 088
#WhoIsJay : 063
💐💐💐
கடந்த வருடம் ஒரு நண்பரை பார்க்க சென்று இருந்தேன். அங்கே வந்திருந்த இன்னொருவரை நண்பர் அறிமுகப்படுத்தினார். அந்த “இன்னொருவரின் ” – ” I am Always Right ” attitude எனக்குள் சிரிப்பாக மாறியது. அப்போது நடந்த உரையாடலை இங்கே பகிர்கிறேன்.
” இந்த வருடம் இரண்டு வீடு வாங்கிட்டேன். நம்ம கணக்கு தப்பாது ”
நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
” இந்த வருடம் 50 இலட்சம் steps நடந்திருக்கிறேன். இதற்கு பெரும் கணக்கு எல்லாம் போட வேண்டியது இல்லை ”
அவரின் பேச்சு வேறு பக்கம் திரும்பியது.
” real estate இல் கொஞ்சம் காசு பார்த்தேன். ” அவர் சொன்ன கொஞ்சம் – கொஞ்சம் அல்ல என்பது அவரின் சிரிப்பில் தெரிந்தது.
எனக்குள் ..
” 166 புத்தகத்தில் இருக்கிறேன். இன்னமும் நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டி இருக்கிறது. ” என்று ஒரு குரல் ஒலித்தது.
அவர் தன்னுடன் வந்த Driver ஐ அதட்டலாய் அழைத்தார்.
” போன வருடம் நம்ம ஊர்ல கோவிலுக்கு எவ்வளவு நாம செஞ்சோம் ? ”
” இரண்டு இலட்சத்திற்கும் மேலே ” driver பயந்து குனிந்து நடித்து சொன்னார்.
எனக்குள் …
” நான் சந்தித்து, நல்ல விடயங்களை பேசி, பகிர்ந்து, கற்று, தன்னை மாற்றிக்கொண்ட மக்கள் ” ஒவ்வொருவராய் ஞாபகத்தில் வந்தனர்.
என் நண்பருக்கு மனதுக்குள் சிரிப்பு உருவாவதை நான் கவனித்தேன். அவருக்கு நான் எதற்கு உள்ளே சிரிக்கிறேன் என்று நன்றாகவே தெரியும்.
முதல் முறையாக நான் கேட்டேன்.
” நீங்கள் இன்னமும் ஏதாவது சாதிக்க வேண்டி இருக்கிறதா sir ? Seems எல்லாவற்றையும் சாதித்தாயிற்று போல ? ”
அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்.
” பசங்களுக்கு இரண்டு வீடு கட்டணும். Bank balance ” கொஞ்சம் ” வைக்கணும். வச்சுட்டா அவங்க வாழ்க்கை settle ஆகிடும் பாருங்க ”
நான் அவருக்கு Bye சொல்லிவிட்டு, நண்பரிடம் கை கொடுத்து விடை பெற்றேன்.
எனக்குள்
” படிக்க நாம் உதவிசெய்த குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் ? என்று கேட்க வேண்டும். அவர்களுக்கு இன்னமும் ஏதாவது உதவி தேவைப்படுமோ ? ” என்று கேட்க தோன்றியது.
வாழ்க்கை அப்படித்தான். பல தரப்பட்ட மனிதர்களால் நமக்கு பாடங்களை நடத்திக்கொண்டே இருக்கும். 😊😊😊
கற்கிறோமா என்பது மட்டுமே கேள்வி ?
பயணிப்போம் – குறிப்பாக கடின காலகட்டத்திலும் ஒன்றாக !
💐💐💐