நான் எனப்படும் நான் : 089
#WhoIsaJay ? : 064
💐💐💐
ஒவ்வொரு முறையும் முதலில் இருந்து – இந்த உணர்வை போல ஒரு உணர்வு உண்டா ? நம்மை மீண்டும் மீண்டும் புதுப்பித்து நமக்கு கொடுக்கும் இந்த உணர்வில் ஏன் நம்மால் வாழ முடிவதில்லை ?
💐 ஒரு விஷயம் நமக்கு தெரிந்தவுடன் நாம் அதை மீண்டும் வேறு மாதிரி கற்கும் வாய்ப்பை இழக்கிறோம். ” இது தெரியுமே ” பெரும் எதிரி போல் !
💐 ஏழை யும், முன்னேற வேண்டும் என்கிற வர்க்கமும் …. “தெரியவில்லை ” என்று சட்டென ஒப்புக்கொண்டு வாழ்கிறது. நடுத்தர வர்க்கமும் பணக்கார வர்க்கமும் தான் எனக்கு தெரியுமே வில் மாட்டி கொண்டு அங்கேயே சுற்றுகிறது.
💐💐💐💐💐💐💐💐💐
104 ஆவது live. ஆனாலும் முதல் live போல தயாராகிறேன். இன்னமும் இதில் என்னவோ கற்க வேண்டியிருக்கிறது என்று மனம் சொல்லிக்கொண்டே இருக்கிறது.
முதல் live க்கும் இன்றைய live க்கும் எனக்குள் நிறைய மாற்றங்கள். ஆனால் எனக்குள் நடக்கும் மாற்றங்களை ஒரு ஓரமாக வைத்துவிட்டு … என்னை இயக்கும் உணர்வில் நின்று பார்த்தால் … அட … முதல் live இன்று என்றே தோன்றுகிறது.
அது தெரியும் இது தெரியும் என்பது எல்லாம் ஒரு நொடியில் சட்டென மாறிப்போகிறது. இன்னமும் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது என்பதே யதார்த்தம்.
நான் யதார்த்தத்தில் வாழ்கிறேன்.
நீங்கள் ?
💐💐💐