நான் எனப்படும் நான் : 090
#WhoIsJay ; 065
💐💐💐
” உங்களை பார்ப்பதற்கு முன் பெரும் கோபக்காரராகவோ அல்லது திமிர் பிடித்தவராகவோ இருப்பீர் என்று நினைத்தேன். ஆச்சர்யம். இவ்வளவு அமைதியாக பேசுகிறீர் ”
சொன்ன நட்பை பார்த்து சிரித்தேன்.
உலகம் எப்போதும் நம்மை முதலில் ” பார்த்து ” எடை போடுகிறது. பின் தான் ” பழகி ” எடை போடுகிறது. போடட்டும். அது உலகின் இயல்பு. மாறுவேடம் இட்ட மனிதர்களுக்கு மத்தியில் அந்த Scan தேவை தான் ! ஆனாலும் …
ஏன் நாம் முதலில் ” பார்க்கப்பட்டு ” பின்னர் உணரப்படுகிறோம் ? அதனால் தான் Mask அணியும் மனிதர்கள் நிறைய வந்துவிட்டார்களோ ?. பார்வைக்கு சரியாக இருக்க வேண்டும் என்று யார் சொன்னது ? அப்படி சரியாக இல்லாமல் இருந்து பின் சரியாக தெரிந்தால் அதில் என்ன தவறு ? ஏன் முதலிலேயே சரியாக தெரிய வேண்டும் ? First impression ஏன் best ஆக இருக்க வேண்டும் ? உண்மையில் Last impression தானே நிலைக்கிறது ?
” பார்க்கப்படுவோம் ” என்று தெரிவதால் தான் முகமூடியை அணிகிறோமா? மனிதர்கள் கடைசியாகத்தான் நம்மை பற்றி முடிவுக்கு வருவார்கள் என்று தெரிந்தால் .. நாம் இயல்பாக இருப்போமோ ? இன்னமும் நிறைய நேரம் இருக்கிறது என்பதால் நாம் எந்த அவசரமும் இல்லாமல் இயல்பாக இருந்து சிரிப்போமோ ?
இயல்பாய் இருப்பது வேறு. இயல்பாக இருப்பதாக நடிப்பது வேறு. கம்பீரமாக இருப்பது வேறு. கம்பீரமாக இருக்கிறேன் பார் என்று சொல்வது வேறு. எங்கேயோ நாம் எதையோ யாருக்கோ ஏன் உணர்த்திக்கொண்டே இருக்க முயற்சிக்கிறோம் ? இதுதான் நான் – என்று ஏன் சொல்ல முடிவதில்லை ?. அப்படி என்ன தான் கிடைக்கிறது அந்த மாறுவேடத்தில் ? ஏதோ ஒரு நாள் களையப்போகும் அந்த மாறுவேடத்திற்கும் ஏன் மக்களிடம் இப்படி ஒரு வரவேற்பு ?
யோசிப்போம்.