நான் எனப்படும் நான் : 091
#WhoIsJay ; 066



” எங்கே சார் இருந்தீங்க இவ்ளோ நாளா ? “
” இங்கே தான் “
” நான் எப்படி பார்க்காமல் போனேன் “
சிரித்து கொண்டே சொன்னேன்.
” பார்க்கும் தேவை ஏற்படாத வரை … நாம் பார்க்க போவதில்லை “
அந்தப் பக்கம் அமைதி பதிலாக இருந்தது.



நான் இருக்கும் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் … இருப்பவர்களுக்கு நான் இருப்பது தெரிய வாய்ப்பில்லை. ஆனால் .. US இல் இருந்து இருவர் என்னுடன் பேசுகிறார்கள். இதைத்தான் தேவை என்கிறேன். தேவை என்று ஒன்று ஏற்படாதவரை நாம் யாரையும் எந்த சூழ்நிலையையும் கவனிக்க போவதில்லை.



என் தேவைகள் கற்றலில் அதிகம் என்பதால் .. நான் கவனிப்பதில் கவனம் செலுத்துகிறேன். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல .. கற்பவருக்கு கற்கும் மனநிலையில் இருப்பவருக்கு செல்லும் இடம் எல்லாம் பாடம்.



ஒரு ஜென் கதை ஞாபகத்தில்.
” குருவே .. என் வாழ்க்கை மிக தாமதமாக ஆரம்பிக்கிறது “
குரு சொன்னார்.
” உன் வாழ்க்கை எங்கேயும் ஆரம்பிக்கவில்லை. முடியவுமில்லை. உன் வாழ்க்கை உன் வருகைக்காக காத்திருக்கிறது. உன் வருகைக்காக மட்டும் ! “


