நான் எனப்படும் நான் : 092
#WhoIsJay : 067
💐💐💐
சில நல்ல நோக்கங்களை கேள்வி கேட்பவர்கள் உண்டு. அந்தக் கேள்விகளை இரண்டு விதமாக எதிர்கொள்ளலாம்
1. அந்தக் கேள்விகளால் நம் நோக்கங்களை இன்னமும் சிறப்பாக்கி கொள்வது.
2. அந்தக் கேள்விகளை சிரித்து கடப்பது.
💐💐💐
1. அந்தக் கேள்விகளால் நம் நோக்கங்களை இன்னமும் சிறப்பாக்கி கொள்வது.
நம்முடன் பயணிப்பவர்கள் நம்மை கேட்கும் சில கேள்விகள், நாம் செய்பவற்றை அடுத்த உயரம் நோக்கி நகர்த்த வைக்கும் முயற்சியாக இருக்கும். அப்படி சில கேள்விகளை இங்கே பகிர்கிறேன்.
💐 இதை ” இப்படி ” செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்களேன் ?
💐 உங்களின் பார்வையை இன்னொரு முறை யோசியுங்கள்.
💐 இன்னும் ஒரு விஷயத்தை சேர்ந்து விட்டீர்கள் என்றால் … நீங்கள் செய்வது மிக சிறப்பாக மாறக்கூடும்.
💐💐💐
2. அந்த கேள்விகளை சிரித்து கடப்பது
சில கேள்விகளை நாம் கேட்ட உடனே சிரித்து விட தோன்றும். நம்மை கிண்டல் செய்வதாக, நம்மை தூற்றுவதாக, நம்மை பின்னோக்கி இழுப்பதாக நினைத்துக் கொண்டு கேட்கப்படும் கேள்விகளை நான் சிரித்து தான் கவனிக்கிறேன்.
சில நிமிட மகிழ்வுகளை இந்த கேள்விகள் கேட்கும் மனிதர்களுக்கு கொடுக்கிறது எனில் … அந்த கேள்விகள் இருந்துவிட்டு போகட்டுமே.
💐 ஏன் குழந்தைகள் இல்லை ?
💐 தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கேட்கலாமா ?
💐💐💐
கேள்விகள் நம் எதிர்கால உறவை நிர்ணயிப்பவைகள். சிதைப்பவைகள் அல்ல. கேட்கும் முன் யோசிக்காமல் கேட்கப்படும் எந்த கேள்வியையும் நான் சிரித்த முகமாகவே கடக்கிறேன்.
அதெல்லாம் இருக்கட்டும். கேள்விகளை கேட்ட பின் யோசித்து நியாயப்படுத்துவதற்கு பதில் .. கேட்கும் முன் யோசிக்க எவ்வளவு நேரமாகும் ?
யோசிப்போம்.
💐💐💐