நான் எனப்படும் நான் : 093
#WhoIsJay : 068
💐💐💐
என்ன தான் வேண்டும் இந்த உலகத்திற்கு ?
கொஞ்சம் யோசித்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. உலகின் இயல்புகளை கவனியுங்களேன்.
💐 வீட்டிற்குள்ளேயே இருந்தால் … ஏன் இப்படியே இருக்கிறாய் என்று கேட்கும் !
💐 வெளியே வந்தால் .. ஓடு என்று சொல்லும் !
💐 ஓடினால் …அமைதியாக இரு என்று சொல்லும் !
💐 அமைதியாக இருந்தால் .. சம்பாதிக்க சொல்லும் !
💐 சம்பாதித்தால் … உதவி செய் என்று சொல்லும் !
💐 உதவி செய்தால் .. Partiality என்று சொல்லும் !
💐 தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தால் .. சமூக அக்கறை உண்டா என்று கேட்கும் !
💐 உடல்நலம் இல்லை எனில் .. Health முக்கியம் என்று சொல்லும். !.
💐 Health ஐ கையில் எடுத்தால் … இப்போது சாப்பிடாமல் எப்போது சாப்பிடுவது என்று சொல்லும் !
💐 பேசினால் பேசாதே .. பேசவில்லை எனில் பேசு … மௌனமாக இருந்தால் சத்தம் அழகு .. சத்தமாக இருந்தால் மௌனம் அழகு … என்ன தான் வேண்டும் இந்த உலகத்திற்கு ?
💐💐💐
ஒன்று மட்டும் புரிகிறது.
உலகம் குழம்பி இருக்கிறது. ஒன்றின் எதிர்ப்புறம் தான் சரியான answer என்று இன்னமும் அதிகம் குழப்பி கொள்கிறது.
அதனால் …
💐 உலகத்திற்கு பதில் சொல்லிக்கொண்டே இருப்பதை யோசிக்க ஆரம்பிக்கலாம்.
💐 வாழும் வாழ்க்கையே பதில்
💐 காலமே இறுதி தீர்ப்பாளர்.
💐 இறப்புக்கு பின் சொல்லப்படும் ஒற்றை வாக்கியம் தான் நிலையானது
💐 அத்துணை விவாதங்களும் கடைசியில் ” அவரவர் பார்வையில் அவரவர் வாழ்க்கை ” என்று தான் முடியும்
💐உடல் மற்றும் மன நலம், தனி மனித ஒழுக்கம், பொருளாதாரம், சமூக உதவி .. ஆகியவையே பெரும் சான்றிதழ்கள்.
💐💐💐
என்னை பொறுத்தவரை உலகிற்கு பதில் சொல்வதை நிறுத்திய பின் ” எனக்கான ” உலகை பெற்று இருக்கிறேன். இந்த ” எனக்கான ” உலகம் அழகாய் எனக்குள் இருக்கிறது. மலர்கிறது. இங்கே நான் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டி இல்லாததால் …
Life Is Beautiful என்று சொல்ல முடிகிறது – உண்மையாக !
யோசிப்போம்.