நான் எனப்படும் நான் : 094
#WhoIsJay : 069
💐💐💐
பறவைகள் தங்கள் குரலை மட்டுமே சொல்கின்றன. நாம் தான் அந்த குரலுக்கு .. என்னென்னவோ அர்த்தங்களை சொல்லிக்கொண்டு இருக்கிறோம். பறவைகள் ஒரு போதும் நம் அர்த்தங்களுக்காக தங்களை மாற்றிக்கொள்ளுவது இல்லை. நானும் ஓர் பறவை.
என்னிடம் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு இங்கே பதில் சொல்கிறேன்.
💐💐💐
முகநூலில் உங்களை பற்றி / உங்களின் பார்வையை பற்றி / உங்களின் அனுபவங்களை பற்றி .. மட்டுமே எழுதுகிறீர்களே ?
—–
அதை நினைத்து நீங்கள் பெருமைப்படுங்கள். யாரோ ஒருவரின், எங்கோ படித்த அனுபவங்களை கொண்டு வந்து சேர்க்காமல் .. தான் வாழ்ந்த வாழ்கிற வாழ்வை எழுதுவது தான் யதார்த்தங்களின் உச்சம். ” Constructed ” ஆகவே படிக்க உங்களை Media வும், மற்றவர்களின் எழுத்தும் பழக்கி இருப்பதால் … என்னிடமும் அப்படியே எதிர்பார்ப்பது சரிதான். ஆனால் அதில் எனக்கு உடன்பாடில்லை. நான் அணியும் உடை தான் நான் பேச விரும்பும் உடை.
பெரும்பாலும் ” பிறர் ” பற்றிய அல்லது ” பிற நிகழ்வு ” பற்றிய தகவல்களை படிக்கும் நமக்கு .. ஒரு மனிதன் அவனின் தினசரி அனுபவத்தை சொன்னால் கசக்கவே செய்யும். ( ஆச்சர்யம் என்னவெனில் .. தன்னை முன்னேற்றிக்கொள்ள நினைப்பவர்களுக்கு அது பெரும் இனிப்பாக இருக்கிறது ).
நான் ” இப்படித்தான் உலகை சந்திக்கிறேன் ” என்பதை விட பாடம் இருக்க முடியுமா என்ன ? ” அவர் இப்படி சந்தித்தாராம் ” என்பதை விட Constructed Learning இருக்க கூடுமா என்ன ?
💐💐💐
உங்களின் பக்கத்தில் Positive Vibe அதிகமாக இருக்க காரணம் ?
—–
என் வெற்றி தோல்விகளை யதார்த்தமாக பதிவதே.
💐💐💐
உங்களை நோக்கி வரும் தனி மனித பகிர்தல்கள் – அவர்களின் வலிகள் – உங்களை பாதிக்காதா ?
பாதிக்கும். ஒரு மனிதனாக சக மனிதனின் வலி என்னை பாதிக்கும். ஆனால் ஒரு பயிற்சியாளராக அது என்னை பாதிக்கவே பாதிக்காது. மருத்துவருக்கு Patient ன் வலி பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. மாறாக .. அந்த வலியை போக்குவதற்கான .. தீர்வுகள் மட்டுமே கண்ணில் தெரிகின்றன.
💐💐💐
உங்களிடம் இருந்து தவறான புரிதலால் விலகியவர்கள் பற்றி ?
—-
முன் வாழ்த்துக்கள். அவர்கள் சிறப்பாக வரும் பட்சத்தில் அவர்களிடம் இருந்தும் என் கற்றல் தொடரும். அப்படி இல்லை எனில் … கற்றலில் அவர்கள் இன்னமும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
💐💐💐
சுருக்கமாக சொல்லுங்கள். வலிகளை கடப்பது எப்படி ?
உங்கள் மேல் ஊற்றப்பட்ட அந்த நீர்மமும் காய்ந்து இருக்கும் இடம் இல்லாது .. போகும். அந்த தருணத்தில் நீங்கள் உங்களை மீண்டும் பெறுவீர்கள். அதற்கான காலம் வரை உங்களை நீங்கள் ” வைத்திருத்தல் ” முக்கியமானது