நான் எனப்படும் நான் : 096
#WhoIsJay ; 071
💐💐💐
” உங்களை சந்தித்தில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ”
சொன்ன அந்த பெண்ணை கவனித்தேன். Teen வயது. முகம் முழுக்க மகிழ்வும், படபடப்பும்.
” நன்றி. எனக்கும் மகிழ்ச்சி ”
சிறிது நேர அமைதிக்கு பின் பேச ஆரம்பித்தார். புது சந்திப்புகளில் இந்த சிறிது நேர ஆரம்ப மௌனம் ஆச்சர்யமான ஒன்று. Aeroplane ஒன்று புறப்பட தயாராகும் போது இருக்கும் மௌனம் அது.
” நீங்கள் எடுத்த Training என் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது. என்னால் நான் நினைப்பதை செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. Guwahati யில் இருந்துகொண்டு நான் என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு – இல்லை நிறைய செய்ய முடியும் என்ற பதில் கிடைத்திருக்கிறது. ”
நான் அமைதியாக இருந்தேன். Guwahati ஒரு வித்தியாசமான நகரம். இந்தியாவும் இல்லாமல் China போலவும் இல்லாமல் ஒரு வித Merge அங்கே தெரியும். நாங்கள் சந்தித்தது Kamakhya temple இல். அவரின் வீடு அந்த கோவிலுக்கு அருகே என்பதால் அந்த இடத்தை நான் தேர்வு செய்திருந்தேன். கிராமமும் அற்ற நகரமும் அற்ற அந்த இடத்தில் இருந்துகொண்டு என்ன செய்ய முடியும் என்கிற அவரின் கேள்விக்கு … Training ல் அவருக்கு விடை கிடைத்திருந்தது.
” நான் உங்களிடம் பார்த்து வியப்பது உங்களின் Perfection. வார்த்தைகளில் கவனம். கிட்டத்தட்ட மருத்துவர் operation செய்வது போலவே கேள்விகள். அவை ஏற்படுத்தும் விளைவுகள். எப்படி வந்தது இந்த Perfection ? ”
இதுவரை நான் பேசவில்லை. ஆனால் இப்போது பேசியாக வேண்டும் என்று உணர்ந்தேன். நமக்கு ஒரு அடையாளம் கொடுக்கப்படும்போது பேசிவிட வேண்டும். இல்லையெனில் அதை நாம் ஒப்புக்கொண்டதாக அர்த்தம் ஆகும். ஆம். ஓர் போர்வை நம் மேல் வீசப்பட்டு இருக்கிறது.
” இந்த உலகில் இரண்டே இரண்டு பேர் தான் Perfectionists. ” சொல்லிவிட்டு அமைதியானேன்.
” ஒண்ணு நீங்க.. இன்னொன்னு ? ” என்று குதூகலமாக அந்த teen கேட்க .. மீண்டும் சிரித்து தலையால் மறுத்து சொன்னேன்.
” ஒருவர் இறந்து விட்டார். இன்னொருவர் இன்னும் பிறக்கவில்லை ”
அந்த teen ன் சிரிப்பு மறைந்து …. முகத்தில் கேள்விக்குறிகள் அப்பிக் கொண்டது தெரிந்தது.
” ஆம். நான் Perfectionist அல்ல. நான் செய்வதில் இன்னமும் நிறைய முன்னேற வேண்டி இருக்கிறது ”
அந்த teen உடனே கேட்டாள்.
” ஆனால் .. மற்றவர்களிடம் உங்களால் மாற்றங்களை உடனே கொண்டு வர முடிகிறதே ”
” ஆம். அது அனுபவ பாடம். என் உயர இலக்கு அநேகமாக 10000 அடியாக இருக்கலாம். உங்களுடையது 8000 ஆக இருக்கலாம். ஆகவே உங்களுக்கு நான் சொல்லியது சரியாக இருந்திருக்க கூடும். ஆனால் .. என் உயர இலக்கினை அடைய நான் இன்னமும் நிறைய மாற வேண்டும் ”
அந்த teen எனக்கு போர்த்த விரும்பிய Perfectionist போர்வையை நான் விலக்கி வைத்துவிட்டு … நான் நானாகவே அமர்ந்து இருப்பதில் அந்த teen க்கு கொஞ்சம் மகிழ்ச்சி ஆனால் நிறைய ஆச்சர்யம். மீண்டும் நான் பேசினேன்.
” உங்களுக்கு ஒருவர் சொல்வதால் அவர் அவரின் வாழ்வில் Perfect ஆக இருப்பார் என்று நம்புவது எந்த விதத்திலும் உண்மை அற்றது. ஏற்கெனவே சொன்னது போல .. அவருக்கான உயரம் வேறு, அதில் அவர் அடைய வேண்டியது இன்னமும் நிறைய இருக்கிறது .. என்றும் ஒரு பார்வை இருப்பதை கவனிக்க வேண்டும். ”
நான் சொல்லி முடித்தவுடன் அந்த teen னிடம் இருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன.
” Ok Jai Sir. Accepted. You are not Perfect. I assumed Wrong ” என்று teen சிரித்தது. கூடவே நானும். நாங்கள் இருவரும் கொஞ்சம் அதிர்ந்து சிரித்ததை அருகே இருந்த வயதான பாட்டி கவனித்து அதுவும் சிரித்தது. அதிராமல்.
எனக்கு அப்போது நிம்மதியாக இருந்தது. பின்னே ? அந்த Perfection போர்வையை நான் வாங்கி இருந்தால் .. மழை குளிர் வெயில் தென்றல் …எல்லாவற்றிலும் அதை நான் போர்த்தி கொண்டு திரிய வேண்டும். உள்ளே வியர்த்தாலும் வெளியே சிரிக்க வேண்டும். எப்போதும் போர்வைக்குள்ளே வேறு ஒரு ஆளாக நெளிந்து கொண்டே இருக்க வேண்டும். தேவையா அது ?
மனிதர்கள் நமக்கு அவர்களின் ” பின்னூட்ட போர்வைகளை ” அளித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் கொடை வள்ளல்கள். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். சில மனிதர்கள் பல போர்வைகளை போர்த்திக்கொண்டு சுற்றுவதை கவனித்து இருக்கிறேன். The Perfectionist, The Time Keeper, The Best, The Specialist .. என்றெல்லாம் ஒரே மனிதன் நிறைய போர்வைகளை போர்த்திக்கொண்டு உள்ளே இருக்கும் Real அவனை அவளை வெளியே காண்பிக்க முடியாமல் .. வாழ்வதை விட நரகம் உண்டா என்ன ?
போர்வைகளை விலக்கி கொண்டே வந்தால் வாழும் இடமே சொர்க்கம். நான் சொர்க்கம் நோக்கி செல்லும் வாழ்க்கை வாழவில்லை. சொர்க்கத்தில் தான் வாழ்கிறேன்.
நீங்கள் ? ( இந்த போர்வையை விலக்க வேண்டும் என்று உங்களுக்குள் இப்போது ஒரு குரல் எழுகிறதே .. அதை முதலில் விலக்குங்களேன். அப்போது உங்களுக்கும் தெரியும் .. சொர்க்கம் இங்கே தான் இருக்கிறது என்று ! )