நான் எனப்படும் நான் : 097
#WhoIsJay ; 072
💐💐💐
Zen கதை ஒன்று ஞாபகத்தில்.
” என்னால் பொறாமைப்படாமல் இருக்க முடியவில்லை குருவே. என்ன செய்வது ? ” சீடரின் கேள்வி.
” உன்னை போன்ற சிறந்த குருடர் உலகில் இருக்க முடியாது ” என்று குரு சொல்ல .. அதிர்ந்த சீடர் கேட்டார்.
” என்ன சொல்கிறீர்கள் குருவே ? ”
” உன்னை போன்ற சிறந்த செவிடர் இருக்க முடியாது. ”
சீடருக்கு என்னவோ புரிந்து அமைதியாக இருக்க ..
குரு சொன்னார்
” உன்னை போன்ற சிறந்த உணர்வாளரை பார்க்க முடியாது. உனக்கே உன்னை பார்த்தால் இப்போது பொறாமையாக இருக்க கூடும். கவனி. ”
💐💐💐
மற்றவர்களை பற்றிய தேவை அற்ற பார்வை எல்லாம் என்னிடம் இல்லை. அவர்கள் எங்கே எதற்காக ஏன் என்னவாக வாழ்கிறார்கள் .. ? இதெல்லாம் ஒரு பார்வையா ? என்ற கேள்வி எனக்குள் ஓடிக்கொண்டே இருப்பதால் … நான் இப்படி யோசிப்பது இல்லை. ஆனால் .. ஒன்று உறுதி.
எப்படி வாழ்கிறார்கள் ? என்பதை கவனிப்பேன். ” எப்படி ” என்கிற கேள்வி நம்மை கவனிக்க வைக்கும். கற்றுக்கொள்ள வைக்கும். முன்னேற்றும். நம்மை நமக்கே அடையாளம் காட்டும்.
அந்த ஒரு கேள்வியில் தான் பொறாமை இல்லை. ( எப்படித்தான் அவர்களால் பணம் சம்பாதிக்க முடிகிறதோ ? – என்பது பொறாமை கேள்வி. எப்படி முடிகிறது – என்பது கற்றல் கேள்வி. வித்தியாசம் புரிய வேண்டும் நமக்கு ! )
💐💐💐
உங்கள் Followers பற்றிய பார்வை என்ன ?
Followers தேவை இல்லை. தேவையே இல்லை. தன் காலில் தன் எண்ணங்களில் தன் உணர்வில் நிற்கும் மனிதர்கள் உருவாக்குவதே எம் நோக்கம். நான் மட்டுமே வளர வேண்டும் என்று நினைத்தால் Followers தேவை. அவரவர் அவரவராக வளர வேண்டும் என்று நினைத்தால் .. எதற்கு Followers ?
எனக்கென்னவோ fb .. Being Thankful என்று ஒரு category யை வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது. Being Thankful ஐ நாம் followers என்று குழப்பிக்கொள்கிறோம்.
💐💐💐
சாமியார் ஒருவரை பார்த்து .. MR Radha வின் வசனம் ஒன்று வரும்.
” அவனே அவன் காலில் நிற்க முடியாமல் தான் உன்கிட்ட வரான். நீ அவன் மேல ஏறிக்கிறேயே .. இது சரியா ? ”
💐💐💐