மீள்நினைவுகள் : 007
மீள் நினைவுகள்
Shuttle Cock ஆடுவது எனக்கு மிகப் பிடித்த ஓர் விளையாட்டு. என்னுடைய வாகனத்தில் எப்போதும் ஒரு Racket சில வருடங்களுக்கு முன் வரை இருந்துகொண்டே இருக்கும். தமிழ்நாட்டில் அநேகமாக அனைத்து ஊர்களிலும் சிறு சிறு Clubகளில் அல்லது பொது இடங்களில். இந்தியாவில் நிறைய மாநிலங்களில்.
Shuttle Cock ஒரு அட்டகாசமான விளையாட்டு. அதிகபட்ச 01 மணி நேர விளையாட்டில் மொத்த வியர்வையும் வெளியேறி விடும். சிறந்த உடற்பயிற்சி.
அது மட்டும் அல்ல. அந்த விளையாட்டில் அருகில் எதிரில் விளையாடும் மனிதர்களை எளிதாக அடையாளம் காணமுடியும்.
1. எப்போதும் partner ஐ குறை சொல்லும் விளையாட்டு வீரர்கள்.
2. எப்போதும் எதிர் பக்கத்தை குறை சொல்லும் விளையாட்டு வீரர்கள்
3. எப்போதும் Umpire Net Shuttle Racket Floor ஐ குறை சொல்லும் விளையாட்டு வீரர்கள்.
4. எந்த குறையும் சொல்லாமல் சிரித்து விளையாடி .. தன் விளையாட்டு திறனை improve செய்யும் விளையாட்டு வீரர்கள்.
5. தன் Partner தவறு செய்தாலும், தான் சிறப்பாக விளையாடி வெற்றியை சிரித்துக்கொண்டே சேர்க்கும் வீரர்கள்.
இதில் ஏதோ ஒரு வகையில் Shuttle players இருப்பார்கள். மேற்சொன்ன வகையில் அந்த Players ஐ பார்க்கும்போது .. என்னால் எளிதாக அவர்களை வகைப்படுத்தி அவர்களுடன் என்னால் விளையாட முடியும். விளையாடி இருக்கிறேன்.
நான் எந்த வகை என்பது என்னுடன் பயணிக்கும் உங்களில் சிலருக்கு … … எளிதாக புரிந்திருக்கும்.
Indore இல் அட்டகாசமான Indoor stadium உண்டு. அதில் .. அதிகாலை 04.30 மணிக்கு என் / எங்கள் Team ன் ஆட்டம் ஆரம்பமாகும். எனக்கு அங்கே JSP saab என்ற பெயர் தான் இன்றும். நான்கு அட்டகாசமான players. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர விளையாட்டு. என் விளையாட்டில் ஒன்று நிச்சயம். நான் வெற்றி பெறுவேனா என்று எனக்கு எப்போதும் தெரியாது. ஆனால் என்னை தோற்கடிப்பது எளிதல்ல.எதிரில் விளையாடுபவர் .. அவரின் best ஐ கொண்டு வந்தே ஆக வேண்டும். அந்த வகையில் நான் அவர்கள் மிக விரும்பும் ஒரு விளையாட்டு வீரன்.
ஆனால் என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டு அந்த களம் விட்டு வெளியே வந்தவுடன் .. அந்த ஆட்டத்தை மறந்து போவது என் பழக்கம். சில மனிதர்களை கவனித்திருக்கிறேன். இரண்டு மாதங்களுக்கு முன் தோற்றதை எல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு ஆடுவார்கள். கொடுமை. என்னை பொறுத்தவரை Play. Give Your Best. Forget. தான் என் style. வாழ்க்கையிலும்.
குறிப்பிட்ட காலத்திற்கு பின் என் பயணங்கள் அதிகரித்தன. அப்போது மெதுவாக, வருத்தமாக…. Shuttle க்கு Bye சொன்னேன். அப்போது தான் நடைப் பயணம் என்னுடன் ஆரம்பித்தது. அன்றில் இருந்து இன்று வரை நடை தான். இப்போதும் Racket எடுத்துக்கொண்டு காலையில் நகரும் மனிதர்களை பார்த்தால் ஒரு ஏக்கம் வரும். ஒரே இடத்தில் வாழ ஆரம்பித்தால் …மீண்டும் இந்த விளையாட்டு என்னுடன் பயணிக்க ஆரம்பிக்கும். அதற்காக காத்திருக்கிறேன்.