மீள்நினைவுகள் : 001



Mount Abu – அங்கே இரவில் பாதுகாவல் செய்யும் மனிதனிடம் இருந்து பெற்றுக்கொண்ட தலைப்பாகை, Shawl,.நீள் தடியுடன் எடுத்த புகைப்படம் இது. நான் அணிந்த பின் அவர் சிரித்து கொண்டே சொன்னது .. ” நன்றாக இருக்கு. “. அவர் பெரும் மீசைக்காரர். நான் மீசையே இல்லாமல். அதை மட்டும் சொல்லிக்காட்டி ” மீசை வைங்க. இன்னமும் நன்றாக இருக்கும் ” என்று அதிர்ந்து சிரித்தார்.



நம் அடையாளங்களில் இருந்து வெளிவர வேண்டும் எனில்… முதலில்… நமக்கு இப்போது இருக்கும் அடையாளத்தை இழக்க தயாராக இருக்க வேண்டும். உடை மாற்றம் வெறும் வெளி அடையாள இழப்பை போல தெரியலாம். ஆனாலும் .. அதற்கும் ஒரு பெரும் தீரம் தேவை.
அடையாளங்களை மாற்றிய பின், நாம் செய்யும் முதல் Check ….
நன்றாக இருக்கிறேனா ? என்ற கேள்விக்கான பதிலைத் தான். ஆக .. நன்றாக இருத்தல் தான் நம் முதல் தேடல். அடையாளம் பற்றி பெரிய பயம் இல்லை நமக்கு. இன்னமும் சொல்ல வேண்டும் எனில் .. நாம் நன்றாக இருக்கும் என்ற உணர்வை ஏற்படுத்தும் எந்த அடையாளமும் …. நமக்கு சரியான அடையாளமாகவே மாறிப்போகிறது.
ஒரு அடையாளத்தை இழக்கும் முன் எனக்குள் நான் கேட்கும் ஒரே கேள்வி ..
” இந்த புதிய அடையாளம் என்னை, என் திறமையை, என் குடும்பத்தை, என் சமூக பார்வையை, இன்னமும் சிறப்பாக மாற்றுகிறதா ? ” என்கிற அந்த கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டால் .. எந்த அடையாளமும் எனக்கு சரியே !
உங்களுக்கு ?


