மீள்நினைவுகள் : 003



பெங்களூரு வில் Senior Citizens களுக்கு வகுப்பு எடுத்த போது எடுத்த படம். Vasan Eye Care ஏற்பாடு செய்த நிகழ்வு அது.



ஒரு வயதானவர் என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.
” நீங்கள் பேரன் பேத்தி எடுத்தது உண்டா ? “
படத்தில் என்னை பார்த்தால் அப்படியா தெரிகிறது? 

. அந்த கேள்விக்கு பின் இருக்கும் Supeorityயை எனக்கு புரிந்து கொள்ள முடியும். பின்னே ?. இல்லை என்று பதில் வரும் – என்று தெரிந்து கேள்வி கேட்பதற்கு என்ன பெயர் ?



சிரித்துக்கொண்டே
” இல்லை ” என்றேன்.
அவர் முகத்தில் ஒரு பெருமித உணர்வு. இருக்காதா பின்னே ? பேரன் பேத்தி பார்த்தவர்க்கு அந்த உணர்வு இருக்கும் இல்லையா ?
” ஏன் என்றால் .. பேரன் பேத்தி பார்க்காமல் நாங்கள் சொல்வதை உங்களால் புரிந்து கொள்ள இயலாது ” என்று சிரித்தார். கொஞ்சம் ஆணவமான விஷமமான சிரிப்பு அது.
நான் சிரித்து கொண்டே சொன்னேன்.
” கண்டிப்பாக. அதனால் .. நிகழ்வை இத்துடன் நிறுத்தி விடலாம் “
அவர் இதை எதிர்பார்க்கவில்லை.
” இல்லை. அப்படி சொல்லவில்லை. நீங்கள் பேரன் பேத்தி எடுத்த பின் இது இன்னமும் சிறப்பாக இருக்கும் “
நான் சிரித்துக்கொண்டே சொன்னேன்.
” அதே தான் நானும் சொல்கிறேன். நான் பேரன் பேத்தி எல்லாம் எடுத்துவிட்டு வருகிறேன். அப்போது உங்களை சந்திக்கிறேன் “
எல்லோரும் பலமாக சிரித்து விட .. அவருக்கு இப்போது புரிந்தது.
” இல்லை நீங்கள் நிகழ்வை நடத்துங்கள். எனக்கும் கற்க ஏதாவது இருக்கும் “
அப்போது நான் உள்பட அனைவரும் சிரித்தோம்.
நாம் நல்லது என்று ஒரு விஷயத்தை சொல்ல வரும்போது இயற்கை சில சவால்களையும் கொடுத்து அனுப்பும். அந்த சவால்கள் நம்மை பட்டை தீட்ட அனுப்பப்படுபவை. அவற்றை சிரித்த முகமாய் எதிர்கொள்வது அழகு. அல்லது பொறுமையாய்.
” நீங்கள் எப்போது சார் Trainer ஆனீர்கள். இதை சொல்வதற்கு ? ” என்று கேட்டு மடக்கிவிட முடியும். ஆனால் அதுவல்ல இங்கே முக்கியம். யார் ஜெயிப்பது என்பதை விட என்ன கற்கிறோம் என்பதே முதல் கற்றல்.



ஒருமுறை Future Unfolds நிகழ்வில் முதல் இரண்டாம் மூன்றாம் பெயரை மாற்றி சொல்லிவிட்டேன். நான் நினைத்திருந்தால் உடனே மாற்றி சொல்லி இருக்க முடியும். ஒரு Micro Second யோசித்தபோது நான் சொன்ன order சரியாக இருக்கும் என்றே தோன்றியது. அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். நிகழ்வு சிறப்பாக வந்திருந்தது.
தனியாக அவர்களிடம் மாற்றி சொன்னதற்கு வருத்தம் தெரிவித்தேன். ஆனால் அவர்களின் பதில் வித்தியாசமானதாக இருந்தது.
” இந்த order ல் பேசியது சரியாக இருந்தது ” என்று அவர்கள் சொன்னபோது ..
இயற்க்கை சரியாகவே அனைத்தையும் செய்கிறது என்றே தோன்றுகிறது.



உதவுவது என்று வந்துவிட்டால் .. சில தடைகளையும் சந்திக்க தான் வேண்டும். அப்படி சந்திப்பவர்களை தான் இயற்கை தேர்வு செய்யும்.