மீள்நினைவுகள் : 004
ஏற்காட்டில் ஒரு Resort இல் தங்கிய போது எடுத்த புகைப்படம். நான் அமர்ந்திருக்கும் இந்த Posture நிறைய நேரங்களில் என்னுடன் பயணிக்கும் ஒன்று.



எதிரில் இருப்பவர் எல்லாம் தெரிந்தது போல பேச ஆரம்பித்தால் நான் உள்ளே சிரித்து விட்டு வெளியே அமைதியாகி விடுவேன். பின்னே ? நாம் அங்கே ஒன்றும் பேசவே வேண்டியது இல்லையே !
” எனக்கு தெரியும் ” என்று சொல்லப்படும் விஷயங்களை கவனித்தால் ஒன்று புரியும். அதற்கு பின்னே இவை ஒளிந்திருக்கும்.
” உனக்கு தெரியுமா ? எனக்கு தெரியும் “
” உனக்கு தெரியாது. நான் சொல்வதை கேள் “
” உனக்கு தெரிய வாய்ப்பே இல்லை “
” எனக்கு மட்டுமே தெரியும் “
” எனக்கு உன்னை விட அதிகம் தெரியும் “
” எனக்கும் தெரியும் “
” எனக்கு தெரியும். போனால் போகிறது என்று இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தேன் “
” நாங்கள்லாம் அப்பவே … “






பொதுவாக இந்த மாதிரி மனிதர்களை பார்த்தால் எனக்குள் ஒரே ஒரு வரி தோன்றும்.
” சரி .. அவருக்கு தெரிகிறது. நாம் அமைதியாக கேட்டுக்கொள்வோம். “
இதில் சில நன்மைகள் உண்டு.



இது அனைத்தையும் விட முக்கியமான ஒன்று ..




” You know Something. Never Generalize it with ” I Know Everything ” ” என்று ஆங்கிலத்தில் ஓர் பழமொழி உண்டு. இன்று வரை ” கொஞ்சம் ” தெரியும் என்பதும், இன்னமும் ” நிறைய ” தெரியவேண்டி இருக்கிறது என்பதும் உள்ளே ஓடிக்கொண்டே இருப்பதால் ..
வலது கை ஆட்காட்டி விரலை வாயின் மேல் வைத்து .. பேசாமல் இரு என்று எனக்குள் சொல்லிக்கொண்டு … அமைதியாக அமர முடிகிறது.
உங்களாலும் முடியும் என்றே எனக்குள் தோன்றுகிறது. முன் வாழ்த்துக்கள்.


