The Covid 19 Pages : Day 01 / 01

#TheCovid19Pages ; Day 01



பொதுவாகவே … நாம் நோய்வாய்ப்படுகிறோம் என்றால் ( இங்கே Covid 19 ) .. ஒரு வித புதிய முகம் நம்மை நோக்கி வர ஆரம்பிக்கும். ஆம். சோர்ந்து போன, தூக்கம் நிரம்பிய, சிரிப்பு மறந்த, மென் தாடி வளர்த்த .. இப்படியெல்லாம் தான் இருக்க வேண்டும் என்று எங்காவது எழுதப்பட்டு இருக்கிறதா என்ன ?
” நிறைய challenges ஐ மற்றவர்களுக்கு கொடுக்கிறாயே .. இப்போது உனக்கு ஒரு Challenge வைக்கிறேன். எங்கே நீ சொல்லிக் கொடுத்த பாடங்களை வைத்து வெளியே வா பார்க்கலாம் ” என்று இயற்கை என்னை கேட்பதாகவே உணருகிறேன். அதையும் செய்து விடுவோம். கற்பதில் சொல்லிக்கொடுப்பவருக்கு மட்டும் விலக்கா என்ன ?



The Effective Observer ;
” 05 senses தான் நாம் ” – என்று ஒரு பாடம் நடந்தது – ஞாபகம் இருக்கிறதா ? ஆம். You are nothing but Your Five Senses. அதேதான். அதையே இப்போது எடுத்துக்கொள்வோம்.
Visual ;
முதல் Paragraph இல் சொன்னது தான். அப்படித்தான் முகம் இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. Hospital என்றாலே சோர்ந்து போகும் முகங்களாக இருக்க வேண்டியதே இல்லை. அங்கேயும் சிரித்த முகத்துடன் இருக்கலாம். சோர்வு உடலுக்கு தான். மனதிற்கு அல்ல ! இன்று காலை எடுத்த இந்த புகைப்பட Visual எனக்குள் புதிய பார்வையை உருவாக்கும். உங்களுக்குள்ளும் !. உடல் வலி இருக்கிறது. Temp இருக்கிறது. வறட்டு இருமல் இருக்கிறது. ஆனால் அதற்காக சோர்ந்து போய் நிற்க வேண்டிய முகம் தேவை இல்லை.
Sound ;
#நான்வீழ்வேனென்றுநினைத்தாயோ உள்ளே ஒலித்துக்கொண்டே இருந்தால் எந்த நோயையும் / வைரஸ் சையும் கடந்து வரலாம். எனக்கான fav வாசகம் இது. அவரவர்க்கு தகுந்த வரிகளை எடுத்துக்கொண்டால் .. இந்த நாட்களும் இதமானவை தான். ” ஐயையோ எனக்கு இப்படி ஆயிடுத்தே ” தான் மனதின் Weakness. ” ஆகட்டும் பார்க்கலாம் ” தான் மனதின் முன்னேற்றம்.
Feel ;
பொதுவாக நாம் நம்மை கவனமாக பார்த்துக்கொள்வோம். ஆனால் ஒரு பெரிய குடும்பம் நம்மை கவனமாக பார்த்துக்கொள்வதை … விட பெரும் பேறு இருக்க முடியுமா ?
Kirthika Tharan
Anuthama Radhakrishnan
– Remote இல் அனைத்தையும் கவனிக்க .. #5pmfamily வேறு விதமாக வேண்டிக்கொள்கிறது. இந்த feel க்கு இணையேதும் உண்டா என்ன ? எத்தனை பெரிய பலம் இது ? எதையும் சந்திக்க வைக்கும் இந்த பலம் இருக்கும்போது … !
Smell ;
வெறும் மாத்திரை வாசனைகள் மட்டும் தான் அருகே இருக்க வேண்டுமா ?. நீண்ட நாட்களாக படிக்க நினைத்துக்கொண்டிருந்த புத்தகங்களின் paper வாசனையும் பக்கத்தில் ! அவை கொடுக்கும் energy யே வேறு ! பழைய இமயமலை புகைப்படங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். மனம் முழுக்க இமய வாசனை !
Taste ;
அனைத்து வித மருந்துகளும் … ஒரு வித Taste ஐ கொடுக்க .. குழந்தைகள் எனக்கு அனுப்பிய Video க்களில் சொல்லப்பட்ட வார்த்தைகள் எனக்குள் ஏற்படுத்தும் உணர்வுகள் ( Happiness Requires Nothing .. ஜெய் uncle ) எச்சில் மகிழ்வாக நாக்குக்குள் பிரமிக்க … அப்போது கிடைக்கும் taste வேறு உயரம் !
இந்த 05 sense களையும் Observe செய்தால் வெளியே மீண்டு வருதல் யதார்த்தம். இல்லை எனில் .. ” என்னமோ போ ” போன்ற தேவையற்ற வாசகங்கள் மனதிற்குள் துருப்பிடித்த தகரமாய் எதையோ கிழிக்க ஆரம்பிக்கும்.



14 நாட்களுக்கும் இந்த எழுத்து அனுபவம் தொடரும் ! புகைப்படமும். ஆம். உடலுக்கு தான் External Attack ! உள்ளே இருக்கும் மனதிற்கு அல்ல ! அந்த மனதின் மகிழ்வுக்கு it requires nothing !



பயணிப்போம் – குறிப்பாக கடின காலக்கட்டங்களில் ஒன்றாக !


