The Covid 19 Pages : Day 02 / 003

#thecovid19pages : Day 02 ; 003



என்ன முகம் பளிச்சென்று இருக்கிறதா ? Credits to
G Indra
Mam’s Abi Soap. சிறப்பாக வருவீர்கள் நீங்கள். முன் வாழ்த்துக்கள்.



முதலில் சில Basics ஐ பார்த்து விடுவோம் ;










ஆம். #5pmlive ல் முதல் வகுப்பு முதல் வகுப்பு அது. அதில் ஒரு ஜென் கதை பகிரப்பட்டு இருக்கும்.
” Is It So ? / அப்படியா ? ” என்ற ஒரு பாடத்தை தரும் அந்த பாடத்தை நான் பல வருடங்களாக கடைப்பிடித்து வருவது என்றாலும் .. இப்போது கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய ஒன்றாக இருப்பதை கவனிக்கிறேன்.
” உங்களுக்கு Swab test எடுக்க வேண்டும் “
” CT Scan எடுக்க வேண்டும். “
” ECG எடுக்க வேண்டும் “
” உங்களுக்கு Negative “
” Swab test ல் உங்களுக்கு Positive “
எல்லாவற்றையும் கேட்டவுடன் முதல் பதில் .. சிரித்த முகத்துடன் .. ” அப்படியா ? ” தான். பின்னே ? நடக்கும் நிகழ்வுகளுக்கு தகுந்த மாதிரி மூச்சு ஏற்ற இறக்கம் நிகழ ஆரம்பித்தால் … ஆற்றில் அடித்து செல்லப்படும் காய்ந்த இலை போல ஆகிப்போகும் மனது சோர்ந்து போகும் வாய்ப்புண்டு. நிகழ்வுகளில் இருந்து விலகி … அப்படியா ? என்று பக்குவப்படும் மனம் எதையும் சந்திக்கும். ஆம். எதையும் !