The Covid 19 Pages – Day 04 / 05
#thecovid19pages ; Day 04 ; Part 05



முதலில் Basics – Temp ? 96.9 / Oxygen ? 97 / Proper Rest ? / Tablets Taken ? / Recommended Food Taken ? – All Done.



” வேது பிடித்தல் ” ” ஆவி பிடித்தல் ” என்று அழைக்கப்படும் இந்த Process – அறிவியல்பூர்வமாக Accepted ஆ என்று தெரியவில்லை. ஆனால் …Relief இல் உடனடி Result கொடுப்பது மட்டும் உண்மை !
வேப்ப இலை, நொச்சி இலை, துளசி இலை, தூதுவளை இலை, கற்பூரவள்ளி இலை … அனைத்தையும் கொஞ்சம் எடுத்து நீரில் மிதக்கவிட்டு, மூடப்பட்ட பாத்திரத்தில் .. அந்த நீரை கொதிக்க வைக்க … ஒரு கட்டத்திற்கு மேல் ஆவி எல்லைக்குள் தாக்கு பிடிக்க மறுக்கும்போது …
மஞ்சள் போர்வை ஒன்றை போர்த்திக்கொண்டு … புது எல்லை வகுத்து … முகத்தை வரும் சூடு ஆவிக்கு முன்னே வைத்தால் .. நொடிகளில் வியர்க்க ஆரம்பித்து … நிமிடத்தில் வழிகிறது. நெற்றி, பின் மூக்கு, பின் தாடை, பின் தோள்பட்டை என்று வியர்க்க வியர்க்க ஏதோ ஒரு Releif மட்டும் உள்ளே தெரிகிறது.
சில நிமிடங்களுக்கு பின் போர்வையை விலக்கிவிட்டு வெளியே முகத்தை எடுத்தால் … அப்படி ஒரு நீர்ம ஓட்டம் முகத்தில் !



Art of Facing Tough Times -இப்படி ஒரு Live எடுத்தது ஞாபகத்தில் இருக்கிறதா ? அதன் Essence ஐ நான் எப்படி Follow செய்கிறேன் என்று பார்ப்போம்.
1. Pain is the part of life and it helps you grow
Covid19 க்கென்று சில வலிகள் உண்டு. ஆனால் அவை தான் நம்மை அடுத்த நிலை நோக்கி நகர வைக்கும்.
2. Mindset is half the battle
உடல் மனம் இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பவை. உடலை சரி செய்துவிட்டு மனதை … கவனிக்காமல் விடுவது முட்டாள்தனம். மனம் – என்னை கேட்டால் – உடல் சரியில்லை என்றாலும் முன்னேறும். ஆனால் மனம் சரியில்லை எனில் உடல் ஒரு inch கூட முன்னேறாது !
3. Your biggest fear don’t exist
நிறைய ” என்ன ஆகுமோ ? ” க்கள் எதுவுமே ஆவதில்லை என்பதே வரலாறு.
4. You are growing through your experiences
அனுபவம் என்பது நம்மை வளர்க்கும் ஒன்று. Covid19 is an Experience. That’s it.
5. You can’t change situations you don’t take responsibilities
Covid19ஐ நான் மாற்றுகிறேன் என்று யோசிப்பது நம் பொறுப்பில் இல்லை. நம்மை இந்த சூழ்நிலைக்கு தக்க மாற்றுவது நம் பொறுப்பில் !
6. The present is all you really have to deal with
” இப்போ என்ன செய்யணும் ? ” என்று ஒரு கேள்வியும், ” சாப்பிடு, மாத்திரை போடு, Rest எடு ” என்று ஒரு பதிலும் ….அவ்வளவு தான் இன்றைய தேவை. மற்ற நினைவுகள் எல்லாம் ” இப்போ ” இல்லை !
7. There is always always always something to be thankful for
இன்னமும் அந்த Ambulance மனிதர்களின் உதவி கண்ணுக்குள்ளே நிற்கிறது.
7. Great things take time
உடனடியாக சரி செய்ய இது மனிதன் கண்டுபிடித்த Machine இல் வரும் Repair அல்ல. இயற்கை என்னும் மாபெரும் சக்தி கண்டுபிடித்த உடல் ! கொஞ்சம் நேரம் எடுக்கவே செய்யும் !
8. If the problem persists for longer time than the Possibilities, you will become a Great person
உடனடியாக தீர்வு அடையாமல், நீண்ட நாளாகியும் தீர்வு அடையாமல் நிலைமை மோசமாகிறது எனில் … உயர் நிலை சிந்தனை நோக்கி மனம் அடைய இன்னொரு சூழலை இயற்கை உருவாக்குகிறது என்று அர்த்தம்.
9. Other people can’t validate you. You are the best person to validate about your self.
இங்கு மட்டும் அல்ல. எங்குமே … நம்மை பற்றி ஒரு முடிவெடுக்க மிகச்சிறந்த ஒருவன் ஒருத்தி உண்டெனில் அது நாம் மட்டுமே. ஆகவே … எதையும் சந்திப்போம்.
10. You are not alone
உலகம் முழுக்க இது நடந்துகொண்டிருக்கிறது. சில பேரின் பேச்சை பார்த்தால் எனக்கு சிரிப்பு வந்துவிடும். ” என்னவோ அவருக்கு மட்டுமே ” வந்த மாதிரி பேச்சாக அது இருக்கும். உங்களுக்கு மட்டும் வந்திருக்கிறது எனில் … நீங்கள் வேற்று கிரகவாசியாகவே இருக்க வேண்டும்.



Fav Scene ;
” நல்லவங்களை ஆண்டவன் நிறைய சோதிப்பான். ஆனா கைவிட மாட்டான்
கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்.. “
நல்லவர் கெட்டவர் எல்லாம் நகர்த்தி வைப்போம். சோதனை வந்தால், அதை சந்தித்து, மீண்டு வந்து, அந்த அனுபவங்களை பகிர்ந்து, மற்றவர்களுக்கு உதவி … அதுதான் பெரும் மகிழ்ச்சி !.
வெறும் சாதனையாகவே இருந்தால் …அப்படி ஒரு வாழ்க்கையும் சலிப்பாகவே இருக்கும் ! எனக்கு அப்படி ஒன்று வேண்டவே வேண்டாம் !


