மீள்நினைவுகள் : 009
மும்பையில் ஒரு திருமண வரவேற்ப்பில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம். அணிந்திருக்கும் இந்த Shirt மிகவும் பிடித்த ஒன்று !



” உங்களால் எப்படி இப்படி சிரிக்க முடிகிறது ? “
நிறைய பேரின் கேள்வி இது !
” உங்களுக்கு பிரச்சினைகளே இல்லையா ? “
” உங்களுக்கு கோபம் வராதா ? “
” உங்களுக்கு ஏமாற்றங்களே இல்லையா ? அப்படி உண்டெனில் எப்படி தாங்கி கொள்கிறீர்கள் ? “
” உங்களை தவறாக நினைத்து பேசும்போதும் சிரிப்பீர்களா ? “
” உங்களை பற்றி புறம் பேசினாலும் சிரிப்பீர்களா ? “
எவ்வளவு கேள்விகளை உருவாக்கிவிடுகிறது இந்த சிரிப்பு ? ஹஹஹ்ஹ.
முதலில் மனிதனாக பிறந்திருக்கும் யாருக்கும்

‘Survival என்று ஒன்று இருக்கும்வரை நல்லதும் கெட்டதும் மகிழ்வும் சோகமும் எதிர்பார்த்தலும் எதிர்பாராததும் .. இருந்துகொண்டே தான் இருக்கும். ‘ – இந்த உண்மை புரிந்தால் ஓரளவிற்கு வாழ்க்கையை ரசிக்க முடியும் – எந்நிலையிலும் ! அங்கே தான் . … ஆம்…அந்த ரசிப்பில் இருந்து தான் சிரிப்பு வருகிறது !



Survival க்கு இரு reactions மட்டுமே உண்டு.
1. எப்போதும் Tensed ஆக அலைவது. அதாவது ” Perfection Phobia ” வில் வாழ்வது. ” சரியாக நடக்க வேண்டுமே ” என்ற நினைப்பில், முகத்தில் சிரிப்பை இழந்து .. வாழ்க்கையை .. ஒருவித Tensed ஆகவே எதிர்கொள்வது !
2. இன்னொன்றும் மேற்சொன்ன அதே தான் – ஆனால் Perfection Phobia யாவை வெளியே எடுத்துவிட்டு, சிரித்து, ஆனாலும் .. ” சரியாக நடத்த முயற்சிப்பது ! “
நடத்த வேண்டும் என்பதற்கும், நடத்த முயற்சிப்பதற்கும் இடையில் தான் ….இந்த சிரிப்பு ஒளிந்து கொண்டு இருக்கிறது. முயற்சி திருவினையாக்கும் என்பது போல – என்னை பொறுத்தவரை – முயற்சி சிரி வினை ஆற்றும். முயற்சியின் சிறப்பான உயரத்தை நாம் செய்துவிட்டு விலகி நிற்க முடிந்தால் சிரிப்பு காலத்திற்கும் நம்முடன் ஒட்டிக்கொள்ளும். சிரிப்பின் வேர் முயற்சியில், முடிவில், தொடக்கத்தில், இடை வரும் இயக்கத்தில் … இருந்து விலகி நின்று பார்க்க முடிந்தால் மட்டுமே !



ஒரு நகைச்சுவைக்கு சிரிப்பதும், எப்போதும் சிரித்த முகமாக இருப்பதும் வேறு வேறு ! ஒரு நகைச்சுவைக்கு சிரிப்பது குளத்தில் எறிந்த ஒரு கல் ஏற்படுத்தும் ஒலி. சிரித்த முகமாக இருப்பது … வருடம் முழுக்க வாழ்நாள் முழுக்க சலசலப்பை ஏற்படுத்தும் நீர்வீழ்ச்சி !
எம் சிரிப்பு நீர்வீழ்ச்சி இனம் சார்ந்தது. ஆங்காங்கே பிரச்சினைகள்,.கோபம், ஏமாற்றம், முகமுடி மனித முகங்கள் .. என்று சிறு சிறு தடங்கல்கள் வந்தாலும் நீர்வீழ்ச்சி நிற்பதில்லை ! நிற்கவும் நிற்காது !
அதன் இலக்கு கடலை அடைவது. ஆங்காங்கே இருக்கும் கற்களுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருப்பது அல்ல !



உங்களின் சிரிக்கும் புகைப்படத்தினை இங்கே இணையுங்கள். இணைத்த பின் மீண்டும் இந்த எழுத்தை படித்து பாருங்கள். என்னவோ உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும் !
முன் வாழ்த்துக்கள் !


