The Covid 19 Pages – Day 06 / 07




Basics ;








Self Belief பற்றி ஒரு Live போட்டிருந்தேன். ஞாபகம் இருக்கிறதா ? அதில் ஒரு முக்கிய point வரும்.
” Deal with Your Negative Inner Voice – This is not Your Voice. “.
அதைப்பற்றி பார்ப்போம்.



Covid19 Positive என்று தெரிந்தவுடன் நமக்குள்ளே சில குரல்கள் கேட்கும்.
” வாழ்க்கை இதோட முடிஞ்சு போச்சா ? “
” குடும்பம் குழந்தைகள் …என்ன ஆகும் ? “
” வியாபாரம் அவ்வளவு தானா ? “
போன்ற குரல்கள் தான் உள்ளே கேட்க ஆரம்பித்தவுடன் … நாம் கொஞ்சம் கலங்கி போவது இயற்கை தான். இங்கே தான் இந்த Self Belief நம்மை சரி செய்யும்.
மேலே சொன்ன குரல்களுக்கு முதல் பதில் ஒரே பதில் தான் …அது ..
” இது என் குரல் அல்ல ! “
ஆம். Inner Voice என்பது எப்போதுமே நமக்கு நல்லதை தான் சொல்லும். Negative ஆகவெல்லாம் சொல்லவே சொல்லாது. எதிராக சொல்ல வாய்ப்பே இல்லை. எதிர்த்து சொல்வது எல்லாம் நம்முடைய Conscious Voice தான் !
” வாழ்க்கை இதோட முடிஞ்சு போச்சா ? ” – என்கிற குரலுக்கு பின் இன்னொரு குரல் கேட்கும். அதுதான் நம் உண்மையான Inner Voice. அந்த குரல் …
” இல்லை. இங்கே இருந்து வாழ்க்கை வேறு மாதிரி ஆரம்பமாகப் போகிறது “
என்று கேட்கும் அந்தக் குரல் தான் Self Belief க்கான குரல்.
அதே போல …
” குடும்பம் குழந்தைகள் என்ன ஆகும் ? ” – என்னும் குரலுக்கு பின்னே …
” ஒன்றும் ஆகாது. நாம் மீண்டும் வந்து நம் குடும்பத்தை கவனிப்போம் – இன்னும் சிறப்பாக ! “
அதே போல ..
” வியாபாரம் அவ்வளவு தானா ? “
என்ற குரலுக்கு பின் ..
” வியாபாரம் வேறு மாதிரி செய்ய வேண்டும். அவ்வளவு தான். கொஞ்சம் யோசிக்க வேண்டும். “



கற்பது முக்கியம் அல்ல. கற்பதை செயல்படுத்துவது தான் முக்கியம். நீங்களும் செயல்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.


