Jerspective : 020
Lake is a River that Enjoys Stillness !
ஏரிக்கும் ஆறுக்கும் இயக்கம் மட்டுமே வித்தியாசம் ! பயணிக்கும் ஆறு, தியானத்தில் சில மாதங்கள் இருந்தால் அது ஏரி ! Pankong Lake – என்பது நாம் நினைப்பது போல இன்னொரு ஏரி அல்ல. அது ஒரு பெரும் உயர வாழ்வின் தவம் ! பயணிகளின் வாழ்வில் முதல் அதிசயம் இது ! மீத ஏழு அதிசயங்களைத் தான் உலகம் கொண்டாடுகிறது.
இந்தியாவும் சீனாவும் மனித எண்ணங்களால் பிரிக்கப்பட்டு நிற்கும் அதே எல்லையில் .. எல்லையை Kilo meters களில் பரப்பிக்கொண்டு ஒரு ஏரி தியானம் செய்யும் எனில் .. அந்த ஏரியின் அந்தப் பக்க கரை சீனா வென்றும் இந்தப் பக்க கரை இந்தியா என்றும் இருக்கும் எனில் .. அது அழகன்று வேறு என்னவாக இருக்க முடியும் ?
இன்று ஏரிகளை எல்லை கட்டி கட்டிட உலகங்களாக மாற்றிவிட்ட நம் கீழான மனதிற்கு எதிரே … சட்டென ஒரு ஏரி .. இரு நாடுகளுக்கு இடையில் … தன்னை பரப்பிக்கொண்டு சிரித்தால் .. எதிரே நிற்பவர்களை சிரிக்க வைக்காமல் என்ன செய்யும் ?
இந்த ஏரி யை கண்ணுக்கெட்டிய வரை பார்க்க முடிந்தால் .. பார்த்த பின் உங்களுக்கு மனதில் …தோன்றும் ஓர் வரி இது மட்டுமே … என்று இருக்கக்கூடும். அது என்ன வரி ?
” அட … இங்கே நானும் ஏரியும் மட்டுமே இங்கே இருக்கிறோம் “
கண்ணுக்கெட்டிய வரையில் நீங்களும் ஏரியும் இருக்கும் ஒரு ஏரியை காண்பியுங்கள் பார்ப்போம் ? அப்படி காண்பிக்க முடிந்தால் … அவ்வளவு ஏரியும் … Pankong ஏரி தான் !
பெரிய ஏரிகளில் அலைகள் உண்டு. இன்று இருக்கும் நகர ஏரிகளில் இந்த அலைகளை பார்க்க வாய்ப்பில்லை. Pankong ஏரியில் … அது யதார்த்தம். காலை வருடும் மென் அலைகள் மீண்டும் மீண்டும் ஒரு செய்தியை சொல்லிக்கொண்டே இருக்கும்.
” எல்லையற்று இரு. உருவாகும் எண்ண அலைகளால் மனங்களை வருடிக்கொண்டே இரு “
அவ்வளவு தான் Pankong ஏரி சொல்லும் செய்தி !
என்ன ? உங்கள் மனதின் கால்கள் வருடப்படுகிறதா ?





