Jerspective : 021
#jerspective : Pankong Lake
” 4000 plus Kilometers பயணம் செய்வது just ஒரு ஏரியை பார்க்க என்றா இருக்கும் ? ஒரு ஏரி – கிட்டத்தட்ட – சொர்க்க நடைமுறைகளை ஒட்டிய அழகை பூமியில் வைத்திருந்தால் மட்டுமே – இப்படி பயணம் செய்து பார்க்க தோன்றும் !
![]()
![]()
![]()
13000 plus அடி உயரத்தில் ஒரு ஏரி, 134 கிலோமீட்டர் க்கு, இரு நாடுகளுக்கு கிட்டத்தட்ட எல்லையாக மாறுவது எல்லாம் … ஆச்சர்ய விடயம் தானே ? ஆம். 134 கிலோமீட்டர்க்கு .. நீள ஏரி ( 05 வித்தியாசமான பெயர்களுடன் ) !
நீரை உங்களால் கவனிக்க முடிகிறதா ? நீருக்கு கீழே இருக்கும் சில்லு பாறைகளின் வண்ணம் வடிவம் சுத்தமாக தெரியும் அளவுக்கான பிரதிபலிப்பு நீர் அது ! அதே போல் .. உங்களால் வான் நீலம் கவனிக்க முடிகிறதா ? தொழிற்சாலை அற்ற உலகில் … வானம் அப்படித்தான் நீல அழகாய் இருக்கும். அது மட்டும் அல்ல. அப்படியான நீல வானம் நீரில் பிரதிபலிக்கும் அழகும் !
பொதுவாகவே நீர் எங்கு தங்கினாலும் அழகு தான். ஆனால் Pollute ஆகாமல் இருந்தால் மட்டுமே ! வருத்தமான விஷயம் என்னவெனில் .. நகர எல்லைகளில் நீர் pollute ஆகி … தன்னை இழந்து, பிரதிபலித்தலையும் இழந்து, தன் வாசம் இழந்து, தன் இருப்பை நாற்றமாய் வெளிப்படுத்துவதற்கு தயாராகும் போது தான் .. மனிதன் மேல் எனக்கு கோபம் வருகிறது !
நீர் மட்டும் இருந்தால் அடுத்த கோள்களை நோக்கி மனிதன் என்றோ பறந்திருப்பான் ! அங்கே வாழவும் ஆரம்பித்து இருப்பான் !! நீர் பூமிக்கு மட்டுமே உரித்தானது. நீர் தான் சொர்க்கம். நீரை பார்த்துக்கொண்டு அமர்வது போல மனம் எளிதாகும் நிகழ்வு ஒன்று இந்த உலகில் வேறு எதுவும் இல்லவே இல்லை !
இதை விட்டுவிட்டு சொர்க்கம் தேடும் மனிதனை நினைத்தால் சிரிப்பே வருகிறது. நீரை ஒழுங்காக வைத்துக்கொள்ளும் யாரும் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள். அப்படி வைத்துக்கொள்ளாத யாரும் .. சொர்க்கத்தை வாழ்க்கையில் பார்க்கவே போவது இல்லை – என்பதே யதார்த்தம் !
என்ன ? நீங்கள் சொர்க்கத்தை தேட போகிறீர்களா ? அல்லது அருகே இருக்கும் சொர்க்கத்தை கவனமாக பார்த்துக்கொள்ளப் போகிறீர்களா ?
யோசிப்போம்.





