மீள்நினைவுகள் : 010



புகைப்படங்கள் எடுத்த பின்பு அவற்றை பார்ப்பது போல ஒரு எச்சில் ஊறும் அனுபவம் இல்லை. இல்லவே இல்லை.



ஒரு புகைப்பட கற்றாளனுக்கு புகைப்படம் எடுத்த பின் தான் நாக்கு சுவைக்கும். குறிப்பாக அந்த புகைப்படத்தை அணு அணுவாக ரசிக்கும்போது !
ஒரு காட்சி கண்ணில் விழுந்தவுடன் Fixed Frame ஆக நிற்கும் அந்த வேளை தான் புகைப்படம் எடுக்க மனம் தயாராகும் வேளை ! அதாவது மனதில் ஒரு Frame தயாரான பின்பு தான் Machine அந்த Frame ஐ தயார் செய்கிறது. ஆக .. முதல் Camera மனம் தான். அங்கே editing எல்லாம் நடந்த பின்பே கருவி காட்சியை பதிவு செய்கிறது !
அப்படி எனில் .. அந்த Frame ஐ பார்ப்பது எதற்காக ?. காரணம் மிக எளிது. ஏற்கெனவே மனம் Fix செய்த Frame சரியாக வந்திருக்கிறதா என்று verify செய்யும் வேலையை மட்டுமே .. கண்கள் பார்க்கின்றன. சரியாக வந்திருந்தால் எச்சில் ஊறி உறுதிப்படுத்தும். சரியாக வரவில்லை எனில் .. Camera மீண்டும் தன் வேலையை ஆரம்பிக்கும்.
புகைப்படங்களை நான் Verify செய்யும்போது நினைத்த படி வந்திருக்கும் போதெல்லாம்.. நான் பெரும் மகிழ்வின் எல்லையில் உள்ளே சிரித்து கொண்டு இருப்பேன். அதன் காரணம் மிக எளிது. பின்னே ? அகம் கண்ட காட்சி ஒன்று கருவியால் வார்க்கப்படும் எனில் .. அதை விட பெரும் உலக அதிசயம் ஒன்று இருக்க முடியுமா என்ன ?
அகக் கண்களின் பிரதிபலிப்பே புகைப்படங்கள். அவை பேசுவதில்லை. பேசவும் தேவையில்லை. ஆம். அவற்றின் மொழி – பேசா மொழி. பார்வையால் கருத்தை கடத்திவிட்டு … காலங்களுடன் பயணிப்பவை அவை. ஒரு புகைப்படத்தை எடுத்து சிறிது நேரம் பார்த்துக்கொண்டே இருந்தால் .. காலத்தின் பின்னே பயணித்து வெளியே வருவதை கவனிக்க முடியும்.
ஆம். புகைப்படங்கள் காலத்தின் பிரதிநிதிகள். காப்பான்கள். ஆதாரங்கள். எல்லைகள். புகைப்பட கற்றாளனும் அப்படித்தான். அதனால் தான் அவன் அவனக்குள் மட்டுமே கேட்கும்படி சிரித்துக்கொள்கிறான் – புகைப்படங்களை பார்க்கும்போது !