Jerspective : 022



மழை பெய்த பின் மொட்டை மாடியில் இருக்கும் ஒரு அமைதி – தனித்தன்மையானது. ஆம். புறாக்கள் பறக்காமல் ஓய்வெடுக்கும் அமைதி அது !
பொதுவாக புறாக்கள் சிறு அதிர்வு அல்லது சத்தம் கேட்டால் நகர்ந்து விடும். அதனால் தான் அமைதிக்கு புறாக்களை பறக்க விடுகிறோம். சாதாரண நாட்களில் இருக்கும் சத்தத்தை மழை எப்போதுமே Mute செய்துவிடும். ஆதலால் மழை பெய்தால் நான் மொட்டை மாடி நோக்கி பயணிப்பதுண்டு. அங்கே இருக்கும் Stillness என் fav. அந்த நேரங்களில் என்னுடன் பயணிக்கும் அல்லது பயணத்தை நிறுத்திவிட்டு பங்கு கொள்ளும் இன்னொரு உயிர்மை … புறாக்கள் !
புறாக்களை நீங்கள் அருகே கவனித்தது உண்டா ? பொதுவாகவே பறவைகள் சத்தம் கேட்டால் நகர்ந்து விடும். புறாக்கள் இன்னமும் ஒரு படி மேலே ! சிறு அசைவும் அவற்றிற்கு எதிரி ! அகமதாபாத்தில் நான் மானெக்பாக் பகுதியில் தங்கி இருந்த போது .. காலையில் முதலில் என்னை வரவேற்பது புறாக்கள் தான். ம்ம்ம்ம் … மம்ம்ம்ம்ம்… மம்ம்ம்ம்ம்ம்ம்… என்று அவை எழுப்பும் சத்தம் மிக வித்தியாசமானது. சத்தம் விரும்பா அவை .. அப்படி என்ன சொல்ல முனையும் அந்த குரலின் வாயிலாக ? என்று எனக்குள் பல கேள்விகள் எழும் !
இன்று காலை தூறல் ஆரம்பித்தவுடன் முதலில் நினைவுக்கு வந்தது மொட்டை மாடி புறாக்கள் தான் ! அமைதியாய் அவை அருகே அமர்ந்து இருந்தால் … அவை மடி மீதும் அமரும் ! இல்லை எனில் தூர வரும்போதே விலகி பறந்துவிடும் !! அவைகளை பொறுத்தவரை .. 0 ஒலி தான் வரவேற்பு அறை.
Stillness ஐ எனக்கு முதலில் கற்றுக்கொடுத்தவை புறாக்கள். புத்தர் அதன் பின்பு தான் வருகிறார். புறாக்கள் உங்களின் அருகே அமர வேண்டும் எனில் .. உங்களிடம் ஒரு தனி Stillness வேண்டும். அப்படி கிடைத்த Stillness ஐ வைத்துக்கொண்டு எப்பேர்ப்பட்ட பிரச்சினைகளையும் நீங்கள் கையாள முடியும். ஆம். புறாக்கள் என்னை பொறுத்தவரை .. Masters in Stillness. அமைதியாய் இருந்தால் அவை இன்னொரு வித அமைதியை கற்றுத்தரும்.
நான் கற்ற அந்த Stillness உங்களுக்கும் கிடைக்க என் முன் வாழ்த்துக்கள்.


