The Covid 19 Pages – Day 14
Day 14 ;



1. அமெரிக்க அதிபர் அவரின் மனைவிக்கு Covid19
2. அமேசானின் 20000 ஊழியர்களுக்கு ( ஆம். 20000 தான் ) – Covid19.
3. Fit ஆக இருந்தால் வராது / Healthy யாக இருந்தால் வராது எல்லாம் Myth. ( வரும் வாய்ப்பு எல்லோருக்கும் ஒன்றே. மீளும் வாய்ப்பில் தான் Healthy யாக இருப்பது உதவக்கூடும் ! அதுவும் உறுதியாக சொல்ல முடியவில்லை. ). 30 Kms அளவிற்கு ஓடிய ஒரு Healthy உடலுக்கும் Covid19 வந்திருக்கிறது. அவர் இன்று இல்லை என்பது பெரும் அதிர்ச்சி. (
சசி தரணி
பக்கத்தை பார்க்கவும் ! )



அப்படி என்றால் என்ன தான் செய்வது ?
1. ஏன் எதற்கு என்ன எங்கே யாரால் எவ்வாறு .. கேள்விகளுக்கு எல்லாம் இனி பதில்கள் இல்லை. ” எப்படி ” என்கிற ஒரே கேள்விக்கு மட்டுமே இனி பதில்.
2. வந்த பின் எவ்வளவு விரைவாக மருத்துவம் செய்துகொள்கிறோமோ அவ்வளவு நல்லது. ( நான் 06 மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்தேன் ! )
3. 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் / ஓய்வு / மாத்திரைகள் / நீராவி மருத்துவ முறைகள் / நல்ல தூக்கம் .. இவை யதார்த்தம். பயம் வேண்டியது இல்லை.
4. அனைத்து பேச்சுக்களையும் தவிர்ப்பது நல்லது. Quarantine உடலுக்கு மட்டும் அல்ல. மனதிற்கும் தான் ! நம் மனிதர்கள் பேச தெரிந்தவர்கள் அல்ல. ” அவர் கூட இறந்து விட்டாராம் ” வகை பேச்சாளர்கள் நாம். யாரிடம் எப்போது என்ன பேச வேண்டும் என்று வகுப்புகள் எடுக்க வேண்டும்.
5. எதிர்மறை சிந்தனைகள் நம்மை இன்னமும் வேகமாக வீழ்த்தும். ஆம். தினசரி 100 / 1000 என்று இறக்கிறார்கள். உண்மை தான். அதில் நாமும் ஒருவர் என்று நினைக்க வேண்டிய அவசியம் இல்லவே இல்லை.
6. இறப்பு வரும் என்று முடிவெடுத்து விட்டால் .. வந்தே தீரும். இல்லை என்றால் எந்த சூழ்நிலையிலும் வரப்போவது இல்லை.
7. புத்தகங்கள் எழுத்து நல்ல திரைப்படங்கள் Documentary இசை .. Creative ஆக ஏதாவது யோசிப்பது அல்லது செய்வது… போன்றவை பெரும் உதவி.
8. நேரத்திற்கு மருந்துகளை எடுத்துக்கொண்டு தூங்குவது முக்கியமான ஓன்று. தூக்கம் இயல்பு. விழித்திருத்தல் எதிர்மறை. இன்று 14 ஆம் நாள். 12 ஆம் நாளே negative என்று வந்தாலும் இன்று கிட்டத்தட்ட 10 மணி நேரம் தூங்கி இருக்கிறேன் இதுவரை. காலை 05 மணியில் இருந்து தூக்கமே !
9. நல் மனிதர்கள் சூழ் உலகு பெரும் பலம். #5pmfamily மாதிரியான குழுக்கள் …நல்ல சிந்தனைகளை விதைத்து கொண்டே இருப்பவை. அப்படியான குழுக்களில் இருந்து கொண்டே நல்லதும் செய்துகொண்டே இருப்பதும், அதை கவனிப்பதும் …பெரும் மனோ பலம்.
10. நான் படித்த புத்தகங்களில் என்னிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய புத்தகங்களின் கருத்துகளை உங்களுடன் #5pmlive ல் பகிர இருக்கிறேன். முன் வாழ்த்துக்கள்.
ஆம். Happy Covid19 என்பது … ஒரு வித பார்வை. அது மனதிற்குள் ஏற்படுத்தும் பலம் மிக முக்கியமான ஒன்று.
உங்களின் Covid 19 அனுபவத்திற்கு முன் வாழ்த்துக்கள்.


