Jerspective : 027
Mist, Drive and Green .. A Moment to Cherish !



சேலம் ஏற்காடு மலைப்பாதை … பலருக்கு … ஒரு Just மலைப்பாதை. சிலருக்கு மட்டுமே .. அது ஒரு வரம். பொதுவாக மலைப்பாதைகள் நம்மை சட்டென ஒரு மகிழ்வுக்கு கொண்டு வந்து விடும். ஆனால் மலைப்பாதையில் வாகனத்தில் செல்லும் மனிதர்கள் Drive மட்டுமே பயணம் என்று கடப்பதை பார்த்தால் எனக்கு வியப்பாக இருக்கும். ஆம்.
மலைப்பாதைகளின் வளைவுகள், அவற்றின் ஒருபக்க Infinite இயற்கை விரிப்பு, பனிப்புகை, ஆங்காங்கே வழியும் சிறு சிறு சாலையோர நீர்வீழ்ச்சிகள், மெல்ல வருடும் தென்றல், கூட்டமாய் பறக்கும் பறவை .. இதையெல்லாம் பார்க்காமல் வேகமாய் பயணிக்கும் மனித வாகனங்களை கண்டால் சிரிப்பு தான் வரும் எனக்கு !
புகைப்படத்திற்கு மலைப்பாதை போல ஒரு அழகான உலகம் இருக்க வாய்ப்பில்லை. ஓங்கி வளர்ந்த மரங்கள் ..பனிப்புகையில் தெரிய முயற்சித்து தெரியாமல் போகும் அழகே அழகு. அதே போல பெய்த மழையின் சாட்சியாய் அவை தேக்கி நிற்கும் மழைத்துளிகள் .. இன்னொரு அழகு !
ஒருமுறை இங்கே ஒரு தம்பதியரை சந்தித்தேன். சாலையின் ஓரத்தில் இருந்த .. அமர்வதர்க்கான சுவரில் அமர்ந்து இருந்த .. அவர்களிடம் பேசியபோது …. அவர்கள் சொன்ன விஷயம் !
” அவ்வப்போது இங்கே வருவோம். எங்களின் பிரச்சினைகளை பேசுவோம். பெரிய இந்த மலைக்கு கீழ் நாங்கள் பேசும் பிரச்சினைகள் மிக சிறியதாக தெரியும். அப்படி தெரிந்தவுடன் சிரித்த முகமாக கிளம்பி விடுவோம் “
சாதாரணமாக சொன்ன அந்த வரிகளுக்கு பின் இருக்கும் பெரும் அர்த்தம் புரிந்தவர்கள் அவர்களின் பிரச்சினைகளை சொல்லிவிட்டு சிரித்து கடப்பது மிக இயல்பாக மாறிப்போகும்.
சிரித்து கடக்க உங்களுக்கும் முன் வாழ்த்துக்கள்.


