Jerspective : 028
A World Waits for Someone’s Arrival. When will You Arrive ?



ஒரு உலகம் இருக்கிறது. நாம் அதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைக்கலாம். அதெல்லாம் பற்றி அது கவலைப்படாது. அதன் கவலை எல்லாம் ஒன்றே ஒன்று தான்.” இப்படி ஓடிக்கொண்டே இருக்கும் இந்த மானிடன் எப்போது இங்கே வருவான் ? இந்த காட்சிகளை எல்லாம் ரசிப்பான் ? “. அது மட்டுமே அதன் கவலை.
ஓடிக்கொண்டே இருக்கிறோம். சம்பாதிக்கிறோம். வீடு இடம் கார் திருமணம் குழந்தைகள் பள்ளி படிப்பு மருமகள் மருமகன் பேரன் பேத்தி .. ஓடிக்கொண்டே இருக்கிறது வாழ்க்கை – பூட்டிய குதிரை போல ! பிறகு ? பிறகென்ன ? நோய் வாய்ப்படுகிறோம். ஏமாற்றப்படுகிறோம். பிள்ளைகள் வேறு என்னவோ பேசுகிறார்கள். புரியாது விழிக்கிறோம். நம்மை ” வயசாயிடுச்சு சும்மா இரு ” என்கிறார்கள். கேட்டுவிட்டு .. அமைதியாகிறோம். ஏதோ ஒரு நாள் Bye சொல்லிவிட்டு மறைகிறோம். அப்போதும் இந்த பகுதி நமக்காக காத்துகொண்டு தான் இருக்கிறது. இந்த பகுதிக்கு … ஒரே கவலை தான்.
” இங்கே தான் பிறந்தான் – இங்கே தான் வளர்ந்தான் – ஆனால் இதையெல்லாம் பார்க்காமல் செல்கிறானே … “
என்பது மட்டும் தான் !
3500 Kms அப்பால் இப்படி ஒரு உலகம் இருக்கிறது. அழகாக. யதார்த்தமாக. அமைதியாக. இங்கே பிறந்து விட்டு இதை பார்க்காமல் செல்லலாமா ? என்று ஒரு கேள்வியை எழுப்பிக்கொண்டே இருக்கிறது அது ! வான், பனி படர் மலை, பசும்புல்வெளி … கீழே ஒரு ஆறு … இதென்ன காட்சியா ? இல்லை மனதின் கடந்த கால காயங்களுக்கு ஆறுதலா? எதுவென்றாலும் ஒன்று உண்மை. அவை நமக்காக காத்திருக்கின்றன.
எப்போது செல்லப்போகிறோம் ? குடும்பமாய் ? குழந்தைகள் உடன் ? தனியாய் ? நட்புக்களுடன் ? குழுக்களாய் ? ஒரே அலைவரிசை நட்புக்களுடன் ?
( புகைப்படத்தை முழுமையாக உணர Mobile ஐ Horizontal ஆக வைத்து பார்க்கவும் )